செய்திகள் :

ஸ்ரீதர் வேம்பு கிளப்பிய மொழி பிரச்னை - ஆதரவும், எதிர்ப்பும் சொல்வதென்ன?!

post image

கடந்த 14-ம் தேதி எக்ஸ் பக்கத்தில் இரண்டு இளைஞர்கள் 'இந்தி தேசிய மொழி' என எழுதப்பட்டிருந்த டி-சர்ட்களை அணிந்திருந்தனர். அதில் இந்தி தேசிய மொழி என்பதற்கு மேல் கோடும் இடம்பெற்றிருந்தது. இது சமூக சமூகவலைதளங்களில் வைரலானது. இதற்கு பதிலளித்த ஜோஹோ தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீதர் வேம்பு, "இந்த உணர்வோடு நான் உடன்படுகிறேன். நீங்கள் பெங்களூரை உங்கள் வீடாக மாற்றினால், நீங்கள் கன்னடம் கற்க வேண்டும், உங்கள் குழந்தைகளுக்கும் கன்னடம் கற்று கொடுக்க வேண்டும். பெங்களூரில் பல வருடங்கள் வாழ்ந்த பிறகு அப்படிச் செய்யாமல் இருப்பது மரியாதைக் குறைவு. பிற மாநிலங்களில் இருந்து சென்னைக்கு வரும் எங்கள் பணியாளர்களிடம் தமிழ் கற்க முயற்சி செய்யுமாறு அடிக்கடி கேட்டுக் கொள்கிறேன்" என தெரிவித்திருந்தார்.

ஸ்ரீதர் வேம்பு பதிவு

ஸ்ரீதர் வேம்புவின் இந்த கருத்துக்கு வரவேற்பும், ஏதிர்ப்பும் கிளம்பியது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள எக்ஸ் பயனர் ஒருவர், "மும்பையில் எனக்கு பல கன்னட நண்பர்கள் உள்ளனர். பல ஆண்டுகளாக இங்கு வசிக்கின்றனர். அதில் எவருக்கு ஒரு வார்த்தை கூட மராத்தி பேசத் தெரியாது. நியாயமா?" என கேள்வி எழுப்பியிருக்கிறார். இதேபோல் மற்றொரு நபர், "பிரச்சனை என்னவென்றால், சென்னையில் 3 ஆண்டுகள் பணிபுரியும் தகவல் தொழில்நுட்ப வல்லுநர் அடுத்த 5 ஆண்டுகள் பெங்களூருவுக்குச் சென்று அடுத்த 2 ஆண்டுகளுக்கு ஹைதராபாத்தில் பணியாற்றலாம். எனவே அவர்கள் தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழியைக் கற்க வேண்டும். பின்னர் இறுதியாக மகாராஷ்டிராவில் எங்காவது தங்கள் சொந்த ஊரில் குடியேற வேண்டும். அப்போது இந்த மொழிகளை மீண்டும் பயன்படுத்தக்கூடாது.

வெவ்வேறு மொழிகளைக் கற்றுக்கொள்வது நல்லது என்றாலும், தவறான பிராந்திய பெருமையை திருப்திப்படுத்த அதை அவர்களின் தொண்டைக்குள் தள்ள முடியாது?. மேலும் பெரும்பாலான தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் செய்யும் பணி ஐரோப்பிய, அமெரிக்க அல்லது பிற சர்வதேச வாடிக்கையாளர்களுடன் ஆங்கிலத்தில் உள்ளது. எனவே இந்த மொழிகளும் தொழில் ரீதியாக உதவாது. சென்னையில் சிறு தொழில்கள் நடத்துவோர், வாடிக்கையாளர்கள் உள்ளூர் என்பதால் சரளமாக தமிழ் பேசுவார்கள். ஹைதராபாத்தில் தெலுங்கு பேசும் குஜராத்திகள் மற்றும் மார்வாடிகளை காணலாம்.

`ZOHO'

இதில் மொழியைக் கற்காதது பிரச்சினை இல்லை. அதனுடன் இணைந்த பிராந்திய ஈகோவைதான் காட்டுகிறது." என தெரிவித்துள்ளார். மற்றொருவர், "நீங்கள் இங்கு முதிர்ச்சியடையவில்லை. எந்த மொழியையும், கலாச்சாரத்தையும் அவமரியாதை செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஆனால் ஒரு மொழியைக் கற்காமல் இருப்பது அவமரியாதையா? உங்கள் லாஜிக் அங்கேயே இறந்து விடுகிறது" என தெரிவித்துள்ளார்.

இப்படி ஸ்ரீதர் வேம்பு தெரிவித்த கருத்துகள் சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பி உள்ளது.

RSS கோட்டையில் ரோடு ஷோ: கறுப்புக்கொடி காட்டிய பாஜக-வினருக்கு பிரியங்கா காந்தி பதிலடி

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலுக்காக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இரண்டு நாள்கள் தீவிரமாக பிரசாரம் செய்தார். அவர் ஆர்.எஸ்.எஸ்.தலைமை அலுவலகம் இருக்கும் நாக்பூரில் ரோடு ஷோ நடத்தினார். மக்கள் ... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: `மீண்டும் ஒரு வாய்ப்பு..!’ - 50 ஆண்டு செல்வாக்கை மீட்பாரா அசோக் சவான்?

நடைபெறவிருக்கும் மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் பல தலைவர்களின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கக்கூடியதாக இருக்கிறது.இத்தேர்தலில் பல அரசியல் வாரிசுகள் களம் காண்கின்றனர். கடந்த மக்களவை தேர்தலுக்கு முன்பு ... மேலும் பார்க்க

Seeman: ``திமுக-வினருக்கு எந்த ரெய்டும் வராது; காரணம் கப்பம்..!" - சீமான் காட்டம்

சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 88 - வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அதனை முன்னிட்டு, திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள அவரின் திருஉருவச் சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கி... மேலும் பார்க்க

Stalin: "மாநிலங்களுக்கான வரிப் பகிர்வை 50 % உயர்த்துக"- மத்திய அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்

மத்திய அரசு 16-வது நிதி ஆணையத்தை அரவிந்த் பனகாரியா தலைமையில் அமைத்து இருக்கிறது.ஆணையத்தின் உறுப்பினர்களாக அஜய் நாராயண் ஜா, ஆனி ஜார்ஜ் மேத்யூ, மனோஜ் பாண்டா, சவுமியா காந்தி கோஷ் ஆகியோர் உள்ளனர். இந்நிலை... மேலும் பார்க்க

`‘விஸ்வாசம்’ ஒன்று... ‘கொள்கை’ வேறு..!’ - ட்ரம்ப்புக்கு ‘தளபதிகள்’தான் தலைவலியா?

நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி வாகை சூடியுள்ள ட்ரம்ப் வரும் ஜனவரி மாதம் பதவியேற்க இருக்கிறார். தனது தேர்தல் பிரசாரத்தில் எல்லைப் பிரச்னை, டீப் ஸ்டேட் விவகாரம், வரி உயர்வு உள்ளிட்ட முக... மேலும் பார்க்க

`செந்தில் பாலாஜி தம்பியை கைது செய்யாத போலீஸ் கஸ்தூரியை கைது செய்ய ஆர்வம் காட்டியது ஏன்?’ - ஹெச்.ராஜா

புதுக்கோட்டையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வருகை தந்த பா.ஜ.க தமிழ்நாடு பொறுப்பாளர் ஹெச். ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "செந்தில் பாலாஜி தம்பி அசோக்குமாரை இதுவரை கைது பண்ண முடியாத... மேலும் பார்க்க