BB Tamil 8: "ஏன் என்னை மாதிரி ஆளெல்லாம் உள்ள வரக் கூடாதா? விளையாடக் கூடாதா?" - ரியா ஓப்பன் டாக்
`பிக்பாஸ் தமிழ் சீசன் 8' 42 நாட்களைக் கடந்து பரபரப்பாகச் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் வைல்டு கார்டு போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற ரியா தற்போது எவிக்ட் ஆகி இருக்கிறார். பிக்பாஸ் வீட்டிற்குள் வைல்டு கார்டு போட்டியாளராகச் சென்ற 6 பேரிலிருந்து முதல் ஆளாக அந்த வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார் ரியா. இது குறித்து அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ந்து வீடியோ ஒன்றையும் பதிவிட்டிருக்கிறார்.
அதில், "எல்லாருக்கும் வணக்கம். நான் ரியா தியாகராஜன். இந்தப் பதிவை எடுக்கும்போது மென்டலி நான் கொஞ்சம் டவுன் ஆகி இருக்கேன். எதனாலன்னா இந்த வாய்ப்பு எனக்குக் கிடைக்கும்போது என்னைச் சுற்றி இருந்த அத்தனை பேரும் என்கிட்ட சொன்ன விஷயம், `நீ பிஆர் டீம் செட் பண்ணு, நீ இப்படி ஒர்க் பண்ணு, நீ அப்படி ஒர்க் பண்ணு, இப்படியெல்லாம் ஸ்டார்டஜி பண்ணு'ன்னுலாம் சொன்னாங்க. ஆனா, நான் அது எதுவுமே பண்ணல.
நான் இவங்ககிட்ட சொன்ன விஷயமுமமே என்னன்னா `இல்ல நான் உள்ள போயிட்டு ஏதோ ஒண்ணு பண்றேன்னு மக்களுக்குத் தெரிஞ்சாலும் மக்கள் எனக்குச் சின்னதா சப்போர்ட் கொடுப்பாங்க. அது எனக்குப் போதுங்கிற மாதிரிதான் சொல்லிட்டு உள்ளே என்ட்ரியே கொடுத்தேன்.
இந்த என்ட்ரிக்கு அப்புறமும் எந்தெந்த இடத்துல எல்லாம் தப்புன்னு தோணியிருக்கோ அந்த எல்லா இடத்திலேயும் என்னால எவ்ளோ முடியுமோ அவ்ளோ நின்னுருக்கேன். இந்த எல்லா விஷயமும் எந்த அளவுக்கு உங்களுக்கு ரீச் ஆகியிருக்குன்னு எனக்குத் தெரியாது. ஆனா, நான் ஏதோ ஒண்ணு பண்றேங்கிற விஷயம் உங்க எல்லாருக்கும் ரீச் ஆகியிருக்கும். அப்படி இருந்தும் நீங்க ஏன் எனக்கு சப்போர்ட் பண்ணலங்கிற விஷயம் எனக்கு கேள்வியா போயிட்டே இருக்கு.
பின்னாடி ஏதோ ஒரு இடத்துல எனக்கு ஃபேம் இல்ல. அதுதான் ஒரு காரணமா இருக்குமோங்கிற கேள்வியும் எனக்குள்ள போயிட்டிருக்கு. இதையும் தாண்டி ஏன் என்னை மாதிரி ஆளெல்லாம் உள்ள வரக் கூடாதா? நாங்களாம் இதை விளையாடணும்னு நினைக்கக் கூடாதா? மீறி ஏதாவது பண்ணனும்னா நீங்க எல்லாரும் சப்போர்ட் பண்ண மாட்டீங்களான்னு பல கேள்விகள் என் மண்டைக்குள்ள ஓடிட்டிருக்கு.
இதை புராசஸ் பண்ணி எப்படி இதை நான் ஓவர்கம் பண்ணி வருவேன்னு எனக்குத் தெரியல. இதைத் தாண்டி நிறைய பேர் எனக்கு சப்போர்ட் பண்ணியிருக்கீங்க. உங்க எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி. எனக்கு வேற என்ன சொல்றதுன்னு தெரியல" எனக் குறிப்பிட்டு எமோஷனலாக பேசியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...