செய்திகள் :

`செந்தில் பாலாஜி தம்பியை கைது செய்யாத போலீஸ் கஸ்தூரியை கைது செய்ய ஆர்வம் காட்டியது ஏன்?’ - ஹெச்.ராஜா

post image

புதுக்கோட்டையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வருகை தந்த பா.ஜ.க தமிழ்நாடு பொறுப்பாளர் ஹெச். ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "செந்தில் பாலாஜி தம்பி அசோக்குமாரை இதுவரை கைது பண்ண முடியாத காவல்துறை, பிரதமரை தரக்குறைவாக பேசிய தா.மோ.அன்பரசனை இதுவரை கைது செய்யாமல் மந்திரி சபையிலும் வைத்துள்ளனர். ஆனால், கஸ்தூரியை மட்டும் கைது செய்துள்ளனர். அந்த பெண்மணிக்கு தக்க பாதுகாப்பு வேண்டும். நீதித்துறை தான் அவரது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். நீதிமன்ற காவலில் இருக்கும் போது தான் சவுக்கு சங்கர் பாதிக்கப்பட்டார்.

திராவிட கட்சிகள் கூட்டணி கட்சிகளுக்கு இடம் தந்தது கிடையாது. 1967-லிருந்து கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்த தி.மு.க இதுவரையில் கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கேற்க வாய்ப்பு கொடுக்கவில்லை. அமைச்சர் ரகுபதிக்கு சட்ட ஞானம் இல்லை என நினைத்தேன். ஆனால், அரசியல் ஞானமும் இல்லை என்று இப்போது தெரியவந்துள்ளது. ரகுபதி என்ன வேண்டுமென்றாலும் பேசலாம்... நிலையான அரசியல் அவருக்கு கிடையாது. அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவருக்கு பாதுகாப்பில்லை. மருத்துவமனையில் டாக்டர் கத்தி வைத்துக் கொள்ளலாம். நோயாளி கத்தி எடுத்து செல்லலாமா?.

ஹெச்.ராஜா

சுகாதாரத்துறை அமைச்சர் சத்தமே இல்லாமல் உள்ளார். இந்த அரசாங்கம் எல்லாத் துறையிலும் தோற்றுபோன வீட்டிற்கு அனுப்ப வேண்டிய அரசாங்கம். பள்ளிக்கல்வித்துறையில் பத்தாயிரத்து ஐநூறு ஆசிரியர்கள் போலிகள். கல்லூரிகளில் 980 பேராசிரியர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட கல்லூரிகளில் பேராசிரியர்களாக இருந்துள்ளனர். இந்த அரசாங்கத்தின் ஒரு துறை கூட திறமையாக செயல்படவில்லை. எதிர்க்கட்சிகள் சுட்டிக் காட்டத்தான் முடியும். ஆனால், செயல்படுத்த வேண்டியது ஆளும் அரசாங்கம் தான்.

நாங்கள், எந்த கட்சிசியையும் எங்களின் ஏ டீம், பி டீம் என்று கூறவில்லை. நாங்கள் அ.தி.மு.க-வை கூட்டணிக்கு வாங்க என்று மனு போட்டு கூப்படவில்லை. நாங்கள் அழைப்பு விடுத்து இருந்தால் தான் எடப்பாடி பழனிசாமி எங்களை புறக்கணிக்கிறார் என்ற சொல்ல முடியும். எனினும், எங்களைப் பொறுத்தவரை இங்கு உள்ளவர்கள் யார் என்ன சொன்னாலும் கூட்டணி குறித்து எங்களது அகில இந்திய தலைமை தான் முடிவு செய்யும். அப்போது அகில இந்திய தலைமை எங்களிடம் பேசுவார்கள். யாருக்கும் கனவு காண உரிமை உள்ளது. அதனை என்னால் தடுக்க முடியுமா?. திராவிடம் என்பது இடத்தை குறிக்கும். திராவிடம் என்பது தமிழ் சொல்லே அல்ல. அது, சமஸ்கிருத சொல். தென்னிந்தியாவில் உள்ள பிராமணர்கள் தான் திராவிடர்கள். அதனை இங்கு உள்ளவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்" என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

36 words / 337 characters

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

Stalin: "மாநிலங்களுக்கான வரிப் பகிர்வை 50 % உயர்த்துக"- மத்திய அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்

மத்திய அரசு 16-வது நிதி ஆணையத்தை அரவிந்த் பனகாரியா தலைமையில் அமைத்து இருக்கிறது.ஆணையத்தின் உறுப்பினர்களாக அஜய் நாராயண் ஜா, ஆனி ஜார்ஜ் மேத்யூ, மனோஜ் பாண்டா, சவுமியா காந்தி கோஷ் ஆகியோர் உள்ளனர். இந்நிலை... மேலும் பார்க்க

ஸ்ரீதர் வேம்பு கிளப்பிய மொழி பிரச்னை - ஆதரவும், எதிர்ப்பும் சொல்வதென்ன?!

கடந்த 14-ம் தேதி எக்ஸ் பக்கத்தில் இரண்டு இளைஞர்கள் 'இந்தி தேசிய மொழி' என எழுதப்பட்டிருந்த டி-சர்ட்களை அணிந்திருந்தனர். அதில் இந்தி தேசிய மொழி என்பதற்கு மேல் கோடும் இடம்பெற்றிருந்தது. இது சமூக சமூகவலைத... மேலும் பார்க்க

`‘விஸ்வாசம்’ ஒன்று... ‘கொள்கை’ வேறு..!’ - ட்ரம்ப்புக்கு ‘தளபதிகள்’தான் தலைவலியா?

நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி வாகை சூடியுள்ள ட்ரம்ப் வரும் ஜனவரி மாதம் பதவியேற்க இருக்கிறார். தனது தேர்தல் பிரசாரத்தில் எல்லைப் பிரச்னை, டீப் ஸ்டேட் விவகாரம், வரி உயர்வு உள்ளிட்ட முக... மேலும் பார்க்க