ஆராய்ச்சி மாணவர்களை மதிப்புடன் நடத்த வேண்டும்- உயர்கல்வித் துறை
A R Rahman: ``இந்தியாவில் VR மூலமாக கோயில்களை சுற்றி பார்க்கலாம்...'' - ஏ.ஆர். ரஹ்மான்
சென்னை ஐஐடியின் இந்த ஆண்டிற்கான 'XTIC' எனும் ஆராய்ச்சி விருதை இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் பெற்றார்.
2022 ஆம் ஆண்டு வெளிவந்த 'லீ மஸ்க் (Le Musk)' என்ற 5D திரைப்படத்தை செயற்கைத் தொழில்நுட்பம் மற்றும் VR தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இயக்கியிருந்தார் ஏஆர் ரஹ்மான். இதற்காக இந்த விருது ஏஆர் ரஹ்மானுக்கு வழங்கப்பட்டது. பொதுவாக எந்தவொரு புதிய தொழில்நுட்பத்தையும் ஆர்வத்துடன் கற்றுக்கொண்டு அதைப் பயன்படுத்திப் பார்ப்பவர் ரஹ்மான். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசியிருக்கும் ரஹ்மான், உலகெங்கிலும் பிரபலமாகி, வளர்ந்து வரும் செயற்கைத் தொழில்நுட்பம் குறித்தும் புதிய தொழில்நுட்பங்கள் நம் நாட்டிலிருந்து வர வேண்டும் என்று நெகிழ்ச்சியுடன் பேட்டியளித்துள்ளார்.
இதுகுறித்து பேசியிருக்கும் ரஹ்மான், "உலகத்திற்காக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட படத்திற்காக, நான் பிறந்த ஊரில்
விருது வாங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். செயற்கைத் தொழில் நுட்பத்தால் 37 நிமிட படம் பார்த்தவர்கள், 10 நிமிடம் படமா என கேட்டனர். புதிய தொழில்நுடபம் என்பதால் அனைவரும் ரசித்தனர். ஏன் அடுத்த மைக்ரோசாப்ட்டோ, ஆப்பிளோ இந்தியாவில் இருந்து வரக்கூடாது?
நமது நாட்டின் வளர்ச்சிக்கு தொழில்நுட்ப வளர்ச்சி அவசியம். புதிய தொழில்நுட்பங்கள் இந்தியாவில் இருந்து உருவாக வேண்டும். இந்தியாவில் VR மூலமாக கோயில்களை சுற்றி பார்க்கலாம். கல்யாண நிகழ்ச்சியை உணர்வு பூர்வமாக ரசிக்கலாம். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மிக பெரிய அளவில் வளர்ந்து வருகிறது. நாம் அதில் கவனம் செலுத்த வேண்டும். கற்பனைக்கு கட்டுப்பாடுகள் கிடையாது. இசை மூலம் மனித சிகிச்சை அளிப்பது குறித்தான ஆராய்ச்சி நடந்து வருகிறது” என்று கூறியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb