செய்திகள் :

விராலிமலையில் மரத்தின் கீழ் ஒதுங்கிய பெண் மின்னல் தாக்கி பலி

post image

விராலிமலையில் மரத்தின் கீழ் ஒதுங்கிய பெண் மின்னல் தாக்கி பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அடுத்துள்ள விளாப்பட்டி ஜம்புலிங்கம் மனைவி பாக்கியம் (49). இவர் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வந்தார். விராலிமலை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு நாள்களாக அவ்வப்போது விட்டு வட்டு மழை பெய்து வருகிறது.

சென்னை சென்ட்ரல் வந்தடையும் வெளிமாநில ரயில்கள் சேவையில் மாற்றம்

பாக்கியம் தான் வளர்த்து வரும் கால்நடைகளை விளாப்பட்டி வீட்டின் அருகே உள்ள காட்டுப்பகுதியில் மேய்த்து கொண்டிருந்துள்ளார். அப்போது இடியுடன் கூடிய மழை பெய்துள்ளது இதனால் மழையில் நனையாமல் இருப்பதற்காக அருகில் இருந்த புளிய மரத்தின் கீழே ஒதுங்கி உள்ளார்.

அப்போது பலத்த சப்தத்துடன் இடியுடன் மின்னல் தாக்கியதில் நிகழ்விடத்திலேயே பாக்கியம் மயங்கி விழுந்து பலியானார். வருவாய்த்துறை மற்றும் இலுப்பூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

ஒகேனக்கல் அருவிகளில் நீர்வரத்து குறைவு!

தமிழகம், கா்நாடகத்தில் உள்ள காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதியில் பெய்த மழையால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து விநாடிக்கு 10,000 கனஅடியாக உள்ளது.கா்நாடகா மாநில நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக த... மேலும் பார்க்க

ஆராய்ச்சி மாணவர்களை மதிப்புடன் நடத்த வேண்டும்- உயர்கல்வித் துறை

ஆராய்ச்சி மாணவர்களை மதிப்புடன் நடத்த வேண்டும் என பேராசிரியர்களுக்கு உயர்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. கோவை பாரதியாா் பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்ற 39-ஆவது பட்டமளிப்பு விழாவில் ஆராய்ச்சி மாணவா... மேலும் பார்க்க

மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கும் வரி வருவாயை 50%ஆக வழங்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கும் வரி வருவாயை 50%ஆக வழங்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.16-ஆவது நிதிக்குழுவுடனான ஆலோசனை கூட்டத்தில் திங்கள்கிழமை அவர் பேசியதாவது, 16-ஆவது நிதிக் குழு பரி... மேலும் பார்க்க

தங்கம் விலை அதிரடி உயர்வு! இன்றைய நிலவரம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 480 உயர்ந்துள்ளது.கடந்த சில நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில், திங்கள்கிழமை அதிரடியாக சவரனுக்கு ரூ.480 உயா்ந்து, ரூ.5... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரிப்பு!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 10,449 கனாடியாக அதிகரித்துள்ளது.காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் லேசான மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக அதிகரித்து வருகிறது... மேலும் பார்க்க

தஞ்சை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று(நவ.18) விடுமுறை

கனமழை காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று(நவ.18) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையையொட்டிய இந்திய பெருங்கடல் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் வரை வளிமண்... மேலும் பார்க்க