குளிர்கால கூட்டத்திலேயே ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா தாக்கல்: கிரண் ரிஜிஜு
இனி 90 நாள்களுக்கு முன்பே அரசு பேருந்துகளில் டிக்கெட் புக்கிங் செய்யலாம்... எப்படி?! | How to
சொந்த ஊருக்கு அல்லது வெளியூருக்கு செல்ல மக்களின் முதல் சாய்ஸ் டிரெயின் என்றால், இரண்டாவது சாய்ஸ் பஸ். தனியார் ஆம்னி பேருந்துகளில் செல்ல பட்ஜெட் கட்டுப்படி ஆகாதவர்களுக்கு அரசு பேருந்துகளே நம்பர் ஒன் சாய்ஸ்.
இந்தப் பேருந்துகளுக்கு கடைசி நேரத்திற்கு சென்று டிக்கெட்டிற்காக நிற்காமல் முன்னரே பதிவு செய்துகொள்ளலாம். இதற்கு முன், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் செல்ல 60 நாள்களுக்கு முன்பு தான் புக் செய்ய முடியும். ஆனால், தற்போது இந்த 60 நாள்கள், 90 நாட்களாக மாற்றப்பட்டுள்ளது. இந்த மாற்றம் இன்றிலிருந்து மதியம் 12 மணி முதல் நடைமுறைக்கு வருகிறது.
எப்படி முன் பதிவு செய்ய வேண்டும்?
https://www.tnstc.in/OTRSOnline/ - இணையதளத்திற்குள் செல்லவும்.
எங்கிருந்து கிளம்ப வேண்டும்? எங்கு செல்ல வேண்டும்? என்பதை குறிப்பிட வேண்டும்.
பின்னர், எப்போது கிளம்புகிறீர்கள் என்பதையும், வேண்டுமானால், எப்போது திரும்ப வருகிறீர்கள் என்பதையும் பதிவு செய்து 'Search Bus' கிளிக் செய்யவும்.
உங்களுக்கு ஏற்ப கட்டணம், கிளம்பும் நேரம் ஆகியவற்றை தேர்ந்தெடுத்து, உங்களுக்கு தோதான பேருந்தை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள்.
அதன் பின்னர், சீட் தேர்ந்தெடுத்து கொள்ளவும்.
பெயர், வயது, பாலினம், மொபைல் நம்பர், மெயில் ஐடி, அடையாள அட்டை, அடையாள அட்டை எண் ஆகியவற்றை பதிவிட்டு 'சப்மிட்' கொடுக்கவும்.
அடுத்து வரும் பக்கத்தில், கார்டு பேமெண்டா அல்லது UPI பேமெண்டா என்பதை தேர்வு செய்து கட்டணம் செலுத்தி டிக்கெட் பதிவு செய்யவும்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb