செய்திகள் :

Short Trip: 'ஆனைகட்டி, குற்றாலம், பர்வதமலை...' - தீபாவளிக்கு போகலாமா ஒரு ஜாலி டிரிப்!

post image

கொஞ்ச வருசத்துக்கு முன்னாடி, தீபாவளின்னா பட்டாசு, பலகாரம், புதுப்படம்னு ஒரே கொண்டாட்டமா இருக்கும். ஆனா, இப்போ நம்ம தீபாவளி கொண்டாட்டம் வாட்ஸ் ஆப் வாழ்த்துக்கள், பேஸ்புக் போஸ்ட், இன்ஸ்டாகிராம் ஸ்க்ரால்னு ரொம்பவும் சுருங்கிப்போச்சு. இந்த தீபாவளியை அப்படி இல்லாம, சின்னதா 'ஒரு குட்டி டிரிப்' அடிச்சு என்ஜாய் பண்ணலாமே...

'லீவு கெடைக்கறதே ஒரு நாள் தான்...இதுல எங்க டிரிப் பிளான் பண்றது?'னு யோசிக்கிறீங்களா...டிரிப்னு சொன்னதும் 'லடாக்'-க்கு எல்லாம் போக சொல்லலைங்க. உங்க ஊரு கிட்ட ஒரே ஒரு நாள்ல போயிட்டு வர மாதிரியான டிரிப்ப தான் சொல்றோம். அந்த டிரிப்களுக்கான கைட் இதோ!

ஆனைகட்டி

ஆனைகட்டி: இந்த இடம் கோயம்புத்தூர் - கேரளா எல்லையில இருக்கு. இது ஒரு மலை பிரதேசம். இங்கே பைக், கார்னு எதுல போனாலும் இங்கே ஒரு 'ஜில்' டிரிப் அடிக்கலாம். இங்கே தான் 'உலகத்துலேயே இரண்டாவது இனிப்பு சுவை தண்ணீர்' சிறுவாணி நீர்வீழ்ச்சி இருக்குதுங்கறது கூடுதல் தகவல் மக்களே...

கொடிவேரி

கொடிவேரி: இது ஒரு 'நீர்வீழ்ச்சி' இடம். ஈரோட்டுல இருக்கு. 'சிலு சிலு' காத்து அடிக்க, ஜில்லுனு நீர்வீழ்ச்சி தண்ணீ நம்ம மேல வந்து விழும்போது, அது ஒரு செம்ம ஃபீல். இங்கே பரிசல்ல பயணமும் இருக்கு. இங்கே போறவங்க, கண்டிப்பா அதை மிஸ் பண்ணிடவே கூடாது.

மாத்தூர் தொங்குப்பாலம்

மாத்தூர் தொட்டிப்பாலம்: இது ஆசியாவிலேயே மிக உயரமான மற்றும் நீளமான தொட்டி பாலம். கன்னியாகுமாரி மாவட்டத்துல இருக்கு. இங்கே சின்ன குளியல் + சுட சுட மீன் சாப்பாடு = சொர்க்கம்.

குற்றாலம்

குற்றாலம்: 'பூக்கடைக்கு எதுக்கு விளம்பரம்'ங்கற மாதிரி நம்ம எல்லாருக்கும் நல்லா தெரிஞ்சா டூரிஸ்ட் ஸ்பாட், குற்றாலம். இந்த இடத்தை செல்லமா 'இயற்கை ஸ்பா'னு சொல்லலாம். இங்கே ஒரு செம்மையான குளியல் முடிச்சுட்டு, திருகுற்றாலநாதருக்கு ஒரு கும்பிடு போட்டா, அது ஒரு பக்கா டிரிப்.

மேகமலை

மேகமலை: 18 ஹேர்பின் பெண்ட்ல ஒரு சூப்பரான டிரைவ் பண்ணிப்போனா டாப்ல 'மேகமலை'. இது தேனி மாவட்டத்துல இருக்கு. இங்கே என்ன ஸ்பெஷல்னு கேட்டா, 'இங்கே அடிக்குற ஜில் காத்தே அத்தனை ஸ்பெஷல்'னு சொல்லலாம்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்: 'ஒரு ஆன்மீக டிரிப்'...இல்லைனா இங்கிலீஷ்ல 'aesthetic' சொல்ற மாதிரியான ஒரு ரசனையான டிரிப் போகணும்னா, தஞ்சாவூர் நல்ல ஆப்ஷன். அங்கே இருக்க கோவில்கள்ல இருக்க ஒவ்வொரு சிற்பத்தை பாக்கும்போது 'அட' சொல்ல வைக்கும்.

கல்வராயன் மலை

கல்வராயன் மலை: டிரெக்கிங்குக்கு செம்ம ஸ்பாட் இந்த இடம். இது கிழக்கு தொடர்ச்சி மலை பகுதில இருக்கு. நீர்வீழ்ச்சி, காடுகள்னு இங்கேயும் பாக்க வேண்டிய இடங்கள் நிறைய இருக்கு.

தடா

தடா: இது ஒரு நீர்வீழ்ச்சி. சென்னை சுட்டெரிக்கும்போது, சென்னை மக்களுக்கு ஆறுதலான இடம், 'தடா'. வழில சும்மா பேசி, சிரிச்சு, என்ஜாய் பண்ணி நடந்துப்போனா, தடா நீர்வீழ்ச்சி வரும் பாருங்க...அந்த ஃபீல் அப்படி இருக்கும். கண்டிப்பா போய் பாருங்க.

பர்வதமலை

பர்வதமலை: ஜாலி, பக்தி ரெண்டும் இருக்க இடம் இது. திருவண்ணாமலைல இருக்கு பர்வதமலை. இங்கப் போனா, டிரெக்கிங்கோட சேர்த்து நிறைய ஆன்மீக வரலாறும் தெரிஞ்சுக்கலாம்.

இந்த இடங்கள்ல எது உங்களுக்கு பக்கத்துல இருக்கோ, அங்க ஒரு டிரிப் அடிச்சு, உங்க தீபாவளியா கெத்தா...மாஸா...ஓஹோவா கொண்டாடுங்க மக்களே.!

ஹேப்பி தீபாவளி!

சூழல் சுற்றுலாவுக்கு இயற்கை அளித்த கொடை `பிச்சை மூப்பன் வலசை'... என்ன சிறப்பு.. எப்படி செல்வது?

பிச்சை மூப்பன் வலசைஆர்ப்பரிக்கும் நுரையுடன் அலையடிக்கும் கடலும், ரவையை கொட்டி வைத்தது போன்ற கடற்கரை மணலும் என்றாலே நம்ம ஊர்காரர்களுக்கு அந்தமான், கோவா, லடசத்தீவு, கேரளா, அந்தமான்தான் ஞாபகத்துக்கு வரும... மேலும் பார்க்க

Goa: 60% சரிந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை; தடுமாறும் பொருளாதாரம் - ஏன் இந்த நிலை?

கோவா நம் இளைஞர்களின் கனவு சுற்றுலாத்தளங்களில் ஒன்று. இதற்கு இங்கு நிலவும் இயற்கை காட்சிகளோடு, அங்கு குவியும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளும் ஒரு காரணம். இந்நிலையில் இங்கிலாந்து, ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட... மேலும் பார்க்க