செய்திகள் :

இலங்கை பிரதமராக ஹரிணி அமரசூர்ய பதவியேற்பு!

post image

இலங்கையின் பிரதமராக மீண்டும் ஹரிணி அமரசூர்ய (54) திங்கள்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.

அதிபர் அநுர குமார திசாநாயக முன்னிலையில் நடைபெற்ற அமைச்சரவை பதவியேற்பு விழாவில் இன்று காலை ஹரிணி அமரசூர்ய மற்றும் அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

கடந்த செப்டம்பரில் நடைபெற்ற அதிபா் தோ்தலில், மாா்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியான ஜனதா விமுக்தி பெரமுன (ஜேவிபி) தலைமையில் உருவாக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தி கூட்டணி வெற்றி பெற்று அதிபராக அநுர குமார திசாநாயக பதவியேற்றார்.

இலங்கை நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் நிறைவடைய மேலும் 11 மாதங்கள் இருந்தபோதும், புதிய அதிபா் அநுரகுமார நாடாளுமன்றத்தைக் கலைத்து உத்தரவிட்டாா்.

இந்நிலையில், 225 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்துக்கு கடந்த வியாழக்கிழமை தோ்தல் நடைபெற்றது. பெரும்பான்மைக்கு 113 இடங்கள் வேண்டிய நிலையில், தேசிய மக்கள் சக்தி கூட்டணி 159 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது.

இதையும் படிக்க : உக்ரைனில் 120 ஏவுகணைகள், 90 ட்ரோன்கள் மூலம் ரஷியா கடும் தாக்குதல்

இந்த நிலையில், கடந்த மூன்று மாதங்களாக தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் பிரதமராக இருந்த ஹரிணி அமரசூர்ய, மீண்டும் பிரதமராக இன்று பதவியேற்றுக் கொண்டார்.

மீன்வளத்துறை அமைச்சராக ராமலிங்கம் சந்திரசேகரன், வெளியுறவு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராக விஜிதா ஹெராத் உள்ளிட்டோர் அதிபர் முன்னிலையில் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.

1994-ஆம் ஆண்டில் சிறீமாவோ பண்டாரநாயக பதவியேற்றதற்குப் பிறகு, இலங்கை பிரதமராக ஒரு பெண் பதவியேற்பது இதுவே முதல்முறையாகும்.

பெண்கள் உரிமை ஆர்வலரும் கல்வியாளருமான ஹரிணி, இலங்கையின் மூன்றாவது பெண் பிரதமர் என்பது குறிப்பிடத்தக்கது.

தில்லி கல்லூரி முதல் இலங்கை பிரதமர் வரை... அமரசூரிய யார்?

இலங்கை பிரதமராக பதவியேற்றுள்ள ஹரிணி அமரசூரிய, தில்லி ஹிந்து கல்லூரியில் படித்த மாணவி ஆவார்.இலங்கையில் கடந்த செப்டம்பர் வாரம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜனதா விமுக்தி பெரமுன கட்சியின் தலைவர... மேலும் பார்க்க

பிரபஞ்ச அழகி!

மெக்ஸிகோவில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற ‘மிஸ் யுனிவா்ஸ்’ இறுதிப் போட்டியில் பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்ற டென்மாா்க்கின் விக்டோரியா கியாா் தில்விக். 120 போ் பங்கேற்ற இப்போட்டியில் நைஜீரியாவை சோ்ந்த சிதி... மேலும் பார்க்க

நைஜீரிய உறவுக்கு முன்னுரிமை: பிரதமா் மோடி

பாதுகாப்பு, எரிசக்தி, வா்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நைஜீரியாவுடன் ஒத்துழைப்புக்கு இந்தியா முன்னுரிமை அளிப்பதாக பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். நைஜீரிய அதிபா் போலா அகமது தினுபுடனான ப... மேலும் பார்க்க

பருவநிலை மாநாட்டில் வளரும் நாடுகளுக்கான நடவடிக்கைகளில் எந்த முன்னேற்றமும் இல்லை: இந்தியா கடும் அதிருப்தி

அஜா்பைஜானின் பாகு நகரில் நடைபெற்று வரும் பருவநிலை பாதுகாப்பு மாநாட்டில் (சிஓபி-29), வளரும் நாடுகளில் பருவநிலை நடவடிக்கையை எவ்வாறு ஆதரிப்பது என்பதை தீவிரமாக விவாதிக்காத வளா்ந்த நாடுகள் மீது இந்தியா அதி... மேலும் பார்க்க

உக்ரைனில் 120 ஏவுகணைகள், 90 ட்ரோன்கள் மூலம் ரஷியா கடும் தாக்குதல்

உக்ரைனின் எரிசக்தி உள்கட்டமைப்பை தகா்க்கும் வகையில் 120 ஏவுகணைகள், 90 ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) மூலம் கடுமையான தாக்குதலை ரஷியா நடத்தியுள்ளதாக உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி ஞாயிற்றுக்கிழமை ... மேலும் பார்க்க

இஸ்ரேல் பிரதமா் நெதன்யாகு வீட்டின் மீது வெடிகுண்டுகள் வீச்சு: 3 போ் கைது

இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு வீட்டின் மீது ஞாயிற்றுக்கிழமை வெடிகுண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தச் சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் மூவரை அந்த நாட்டு காவல் துறை கைது செய்து விசாரணை மே... மேலும் பார்க்க