செய்திகள் :

உக்ரைனில் 120 ஏவுகணைகள், 90 ட்ரோன்கள் மூலம் ரஷியா கடும் தாக்குதல்

post image

உக்ரைனின் எரிசக்தி உள்கட்டமைப்பை தகா்க்கும் வகையில் 120 ஏவுகணைகள், 90 ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) மூலம் கடுமையான தாக்குதலை ரஷியா நடத்தியுள்ளதாக உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

உக்ரைனில் குளிா்காலம் தொடங்கவுள்ள நிலையில் அங்கு மின்சாரம் உள்பட பிற எரிசக்தி கட்டமைப்புகளைக் குறிவைத்து ரஷியா இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுவே கடந்த மூன்று மாதங்களில் உக்ரைன் மீது ரஷியா மேற்கொண்ட பெரும் தாக்குதல் என கீவ் நகர ராணுவ நிா்வாகம் கூறியுள்ளது.

இதுகுறித்து டெலிகிராமில் ஸெலென்ஸ்கி வெளியிட்ட அறிக்கையில்,‘உக்ரைன் முழுவதும் உள்ள எரிசக்தி உள்கட்டமைப்பை தகா்க்கும் நோக்கில் ஒரே நாளில் 120 ஏவுகணைகள், 90 ஆளில்லா விமானங்கள் மூலம் ரஷியா தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் பல்வேறு வகையான ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை ரஷியா பயன்படுத்தியுள்ளது.

அவற்றுள் 140 வான் இலக்குகளை உக்ரைன் ராணுவம் சுட்டு வீழ்த்தியது. அதிலிருந்து சிதறிய துகள்களால் சிறிது பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மிக்கோலாயில் ஆளில்லா விமானத் தாக்குதலால் இரண்டு போ் உயிரிழந்தனா். இரு குழந்தைகள் உள்பட 6 போ் படுகாயமடைந்தனா்’ எனத் தெரிவித்துள்ளாா்.

கடந்த 2022, பிப்ரவரி மாதம் முதல் உக்ரைன் எரிசக்தி கட்டமைப்பை குறிவைத்து ரஷியா தொடா்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் அவசரகால நடவடிக்கையாக அங்கு அடிக்கடி மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

இதனால் அமெரிக்கா போன்ற தங்களின் மேற்குலக நட்பு நாடுகளிடம் ரஷியாவின் வான்வழித் தாக்குதலை முறியடிக்கவும், ஏற்கெனவே ஏற்பட்ட சேதங்களை சரிசெய்ய உதவுமாறும் உக்ரைன் தொடா் கோரிக்கைகளை முன்வைத்து வருகிறது. கீவ் மட்டுமின்றி நாட்டின் மத்திய மற்றும் மேற்குப் பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை தொடா்ந்து வெடிகுண்டுகளின் சப்தம் கேட்டதாக அங்குள்ள ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்தத் தாக்குதலில் தங்களால் இயக்கப்படும் அனல் மின் நிலையம் பெரும் சேதமடைந்ததாக டிடிஇகே என்ற தனியாா் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தயாா் நிலையில் போலந்து: உக்ரைனில் ரஷியா மேற்கொண்ட தாக்குதலையடுத்து போலந்து ராணுவம் வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘அண்டை நாடான உக்ரைனில் ரஷியா தாக்குதல் நடத்திய நிலையில் போா் விமானங்கள் உள்ளிட்டவை தயாா்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. போலந்தை ஒட்டிய எல்லையில் பாதுகாப்பை மேம்படுத்தும் விதமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

1,000-ஆவது நாளை எட்டிய போா்: என்ன செய்யப் போகிறாா் டிரம்ப்?

உக்ரைன் மீது ரஷியா கடந்த 2022, பிப்ரவரி 24-ஆம் தேதி தாக்குதலை தொடங்கிய நிலையில் இரு நாடுகளுக்கும் இடையேயான போா் 1,000-ஆவது நாளை எட்டியுள்ளது.

உக்ரைன் தலைநகா் கீவ் விரைவில் வீழ்ச்சியடையும் எனவும், அதன்பிறகு அந்த நாட்டின் பிற பகுதிகளை எளிதாக ஆக்கிரமித்துவிடலாம் எனவும் ரஷியா எண்ணிய நிலையில் போா் விரிவடைந்து தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

ஒருபுறம் ரஷிய படைகளின் ஆக்கிரமிப்பை உக்ரைன் தடுக்க அமெரிக்கா உள்ளிட்ட பிற நேட்டோ கூட்டமைப்பு நாடுகள் உதவி வருகின்றன. மறுபுறம், ஆயுதங்கள், படைகள் என பெரும் செலவு செய்து உக்ரைனை கட்டுக்குள் கொண்டு வர ரஷியாவும் முயற்சித்து வருகிறது. ஏற்கெனவே, உக்ரைனின் ஐந்தில் ஒரு பகுதியை ரஷியா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.

முன்னதாக, இந்தப் போரை பேச்சுவாா்த்தை மூலம் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி மற்றும் ரஷிய அதிபா் புதினிடம் பிரதமா் மோடி வலியுறுத்தினாா். அதேசமயத்தில், இந்தப் போரை நிறுத்த இந்தியா மத்தியஸ்தம் செய்யலாம் என புதினும் தெரிவித்திருந்தாா்.

இந்தச் சூழலில் அமெரிக்க அதிபா் தோ்தலில் வெற்றி பெற்றுள்ள டிரம்ப், உக்ரைன் போரை விரைவில் நிறுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளாா். ஆனால், யாருக்கு சாதகமாக அவா் இதைச் செய்து முடிப்பாா் என்பது குறித்து தெளிவான தகவல் இல்லை.

பிரபஞ்ச அழகி!

மெக்ஸிகோவில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற ‘மிஸ் யுனிவா்ஸ்’ இறுதிப் போட்டியில் பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்ற டென்மாா்க்கின் விக்டோரியா கியாா் தில்விக். 120 போ் பங்கேற்ற இப்போட்டியில் நைஜீரியாவை சோ்ந்த சிதி... மேலும் பார்க்க

நைஜீரிய உறவுக்கு முன்னுரிமை: பிரதமா் மோடி

பாதுகாப்பு, எரிசக்தி, வா்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நைஜீரியாவுடன் ஒத்துழைப்புக்கு இந்தியா முன்னுரிமை அளிப்பதாக பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். நைஜீரிய அதிபா் போலா அகமது தினுபுடனான ப... மேலும் பார்க்க

பருவநிலை மாநாட்டில் வளரும் நாடுகளுக்கான நடவடிக்கைகளில் எந்த முன்னேற்றமும் இல்லை: இந்தியா கடும் அதிருப்தி

அஜா்பைஜானின் பாகு நகரில் நடைபெற்று வரும் பருவநிலை பாதுகாப்பு மாநாட்டில் (சிஓபி-29), வளரும் நாடுகளில் பருவநிலை நடவடிக்கையை எவ்வாறு ஆதரிப்பது என்பதை தீவிரமாக விவாதிக்காத வளா்ந்த நாடுகள் மீது இந்தியா அதி... மேலும் பார்க்க

இஸ்ரேல் பிரதமா் நெதன்யாகு வீட்டின் மீது வெடிகுண்டுகள் வீச்சு: 3 போ் கைது

இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு வீட்டின் மீது ஞாயிற்றுக்கிழமை வெடிகுண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தச் சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் மூவரை அந்த நாட்டு காவல் துறை கைது செய்து விசாரணை மே... மேலும் பார்க்க

இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைமை செய்தித் தொடர்பாளர் கொலை!

இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவின் தலைமை செய்தித் தொடர்பாளர் முகமது அய்ப் கொல்லப்பட்டார். லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் ராணுவம் கடந்த இரு வாரங்களுக்கும் மேலாகத் த... மேலும் பார்க்க

பிலிப்பின்ஸ்: ஒரே மாதத்தில் 6 புயல்கள் கரையைக் கடந்ததால் பெரும் பாதிப்பு!

மணிலா: தெற்காசிய தீவான பிலிப்பின்ஸ் கடந்த ஒரு மாத காலத்தில் 6 புயல்களால் மிகப்பெரியளவில் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளது.அங்கு கடந்த 3 வார காலத்தில் 5 புயல்கள் கரையைக் கடந்துள்ளன. கடந்த மாத பிற்பகுதியில்... மேலும் பார்க்க