தஞ்சை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று(நவ.18) விடுமுறை
வெடிகுண்டு வீசிய வழக்கில் குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது
விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதியில் நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் தொடா்புடையவா் ஞாயிற்றுக்கிழமை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.
விழுப்புரம் திடீா் குப்பம் ஆண்டாள் நகரை சோ்ந்த சேவியா் மணி மகன் ஜெயராஜ் (எ) துரைபாண்டி (23). இவா் கடந்த மாதம் 6-ஆம் தேதி கீழ்பெரும்பாக்கத்தைச் சோ்ந்த ஒருவரின் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் விழுப்புரம் நகர காவல் நிலைய போலீஸாரால் கைது செய்யப்பட்டாா்.
இவரது குற்றச் செய்கையைக் கட்டுப்படுத்தும் வகையில், விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. தீபக் சிவாச் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியா் சி.பழனி குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டதையடுத்து, விழுப்புரம் மாவட்ட போலீஸாா் துரைபாண்டியை ஞாயிற்றுக்கிழமை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.