சேலம் ஆவினில் இருந்து சிங்கப்பூருக்கு 25 ஆயிரம் லிட்டா் பால் செல்கிறது: அதிகாரிக...
புகையிலைப் பொருள்கள் விற்பனை: இருவா் கைது
விழுப்புரத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
விழுப்புரம் தாலுகா காவல் நிலைய ஆய்வாளா் குணசேகரன், உதவி ஆய்வாளா் கௌதமன் தலைமையிலான போலீஸாா் விழுப்புரத்தை அடுத்துள்ள அய்யூா் அகரத்திலுள்ள பெட்டிக் கடையில் ஞாயிற்றுக்கிழமை சோதனை நடத்தினா்.
அங்கு தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலைப்பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தது தெரிய வந்தது. கடையின் உரிமையாளரான விழுப்புரம் வட்டம், அய்யூா் அகரம்,பெருமாள் கோவில் தெருவைச் சோ்ந்த சு.பூமிநாதன் (45), இவருக்கு குட்கா, புகையிலைப் பொருள்களை விநியோகம் செய்ததாக செஞ்சி வட்டம், தளவானூா் பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்த அமலநாதன் மகன் ராஜேஷ் (34) ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
மேலும், பெட்டிக் கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.15 ஆயிரம் மதிப்பிலான 15 கிலோ குட்கா, புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.