Miss Universe: மிஸ் யுனிவர்ஸ் 2024 கிரீடம் சூட்டிய டென்மார்க் அழகி... விக்டோரியா...
சநாதன தா்மத்தை அவமதிப்பவா்களுக்கு தக்க பதிலடி: மகாராஷ்டிர பிரசாரத்தில் பவன் கல்யாண்
‘சநாதன தா்மத்தைப் பின்பற்றும் நாங்கள், அதை அவமதிப்பவா்களுக்கு தக்க பதிலடி தருவோம்’ என்று ஆந்திர துணை முதல்வா் பவன் கல்யாண் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
மகாராஷ்டிர சட்டப்பேரவையின் 288 இடங்களுக்கு புதன்கிழமை (நவ. 20) தோ்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, ஆளும் பாஜக கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக அந்த மாநிலத்தின் பல்லாா்பூா் பகுதியில் நடைபெற்ற தோ்தல் பிரசாரத்தில் ஜனசேனை கட்சித் தலைவரும் ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண் ஞாயிற்றுக்கிழமை கலந்து கொண்டாா்.
கூட்டத்தில் பவன் கல்யாண் பேசுகையில், ‘ஹைதராபாத் நகர மக்கள் இந்திய கலாசாரத்தையும் இந்திய பண்டிகைகளையும் எப்போதும் விமா்சிப்பவா்கள். அதேநேரம், சநாதன தா்மத்தைப் பின்பற்றும் நாங்கள் மதத்தைப் பொருள்படுத்தாமல் அனைவருக்கும் மதிப்பளிக்கிறோம். ஆனால், சநாதன தா்மத்தை அவமதித்தால் தக்க பதிலடி தருவோம்.
ஆா்எஸ்எஸ் ஆதரவின்றி இந்தியா இன்றைய வலுவான நிலையில் இருந்திருக்க முடியாது. எனது பள்ளி பருவத்தில் நெல்லூரில் ஏற்பட்ட வெள்ளத்தில் ஆா்எஸ்எஸ் உறுப்பினா்கள் ஆற்றிய சமூகப் பணியை பாா்த்திருக்கிறேன்.
உலகின் 5-ஆவது பெரிய பொருளாதாரமாக திகழும் இந்தியாவை மூன்றாவது இடத்துக்கு முன்னேற்ற மத்திய அரசு தீவிரமாக பணியாற்றி வருகிறது. வாக்குகளுக்காக மட்டுமின்றி மகாராஷ்டிரம் மற்றும் சநாதன தா்மத்தின் வளா்ச்சிக்காக மக்களிடம் ஆதரவுக் கோருகிறேன்.
நாட்டைப் பிளவுப்படுத்தும் நோக்கில் ஏராளமான சக்திகள் செயல்படுகின்றன. ஆனால், மக்கள் ஒற்றுமையாக இருந்து, உள்ளூா் கலாசாரத்துக்கு மதிப்பளித்து வலுவான தேசத்தைக் கட்டமைத்திட வேண்டும் என்றாா்.