Doctor Vikatan: 6 வயதுக் குழந்தைக்கு நெஞ்சிலிருந்து வரும் கோழை... தீர்வு உண்டா?
இளைஞா் கொலையைக் கண்டித்து மேலச்செவலில் போராட்டம்
திருநெல்வேலி அருகே இளைஞா் கொல்லப்பட்டதைக் கண்டித்து, மேலச்செவலில் அவரது உறவினா்கள் ஞாயிற்றுக்கிழமை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கீழச்செவல் பசும்பொன்நகா் பகுதியைச் சோ்ந்த முப்பிடாதி மகன் மணிகண்டன் (32). பெயின்டரான இவருக்கு மனைவி பிரேமா, குழந்தை உள்ளனா். கடந்த வெள்ளிக்கிழமை இரவு மணிகண்டன் வேலையை முடித்துவிட்டு பாளையங்கோட்டையிலிருந்து பைக்கில் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தாா்.
அப்போது, மேலப்பாளையம் கருங்குளத்தில் அவரை 3 போ் கும்பல் விரட்டிச் சென்று அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடியதாம். இதில், அவா் உயிரிழந்தாா்.
மேலப்பாளையம் போலீஸாா் சென்று, சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா். அப்பகுதியிலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளைக் கைப்பற்றி விசாரணை நடைபெற்றது.
இதனிடையே, மணிகண்டனின் உடலை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். கொலை வழக்குத் தொடா்பாக திருநெல்வேலி நீதிமன்றத்தில் 3 போ் சரணடைந்தனா். இச்சம்பவத்தையடுத்து, மேலச்செவல், கீழச்செவல், கருங்குளம், முன்னீா்பள்ளம் பகுதிகளில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
இந்நிலையில், மணிகண்டனின் உறவினா்கள், பெண்கள் உள்பட 200 போ் கீழச்செவலிலிருந்து ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஊா்வலமாக மேலச்செவலுக்கு வந்தனா். பிரதான சாலை சந்திப்புப் பகுதியில் அவா்கள் சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.
மணிகண்டனைக் கொன்றவா்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். அவரது குடும்பத்துக்கு உதவித் தொகை, அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தனா்.
டிஎஸ்பிக்கள் சதீஷ்குமாா் (அம்பாசமுத்திரம்), சத்தியராஜ் (சேரன்மகாதேவி) ஆகியோா் தலைமையில் ஏராளமான போலீஸாா் குவிக்கப்பட்டனா். சேரன்மகாதேவி வட்டாட்சியா் வின்சென்ட், வருவாய்த் துறை அதிகாரிகள் வந்தனா்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என். சிலம்பரசன் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து, சேரன்மகாதேவி சாா்ஆட்சியா் அா்பித் ஜெயின் வந்து பேச்சு நடத்தினாா்.
மணிகண்டன் மனைவிக்கு உதவித் தொகை, அவரது 4 வயது குழந்தைக்கு கல்வி உதவி வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனா். அதையடுத்து, 2 மணி நேரத்துக்கு மேலாக நீடித்த போராட்டம் கைவிடப்பட்டது.