செய்திகள் :

10, 12 ஆம் வகுப்பு மாணவர்களைத் தவிர அனைவருக்கும் ஆன்லைன் வகுப்புகள்!

post image

தில்லியில் காற்று மாசு காரணமாக 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களைத் தவிர அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் நிறுத்தப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும் என்று தில்லி முதல்வர் அதிஷி அறிவித்துள்ளார் .

குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில் தலைநகர் தில்லியில் காற்று மாசு தீவிரமடைந்துள்ளது. பனியைப் போல எங்கும் புகை மண்டலமாகக் காட்சியளிக்கிறது. தில்லியின் காற்று தரக் குறியீடு மிகவும் மோசமடைந்து நேற்று மாலை 441 அளவிலும், போகப்போக 457 அளவிலும் அதிகமாகியுள்ளது.

இந்த நிலையில், காற்று தர மேலாண்மை ஆணையம் வெளியிட்ட அறிவிப்பின்படி தீவிரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு ஏற்கனவே உள்ள 1,2,3 ஆம் நிலை கட்டுப்பாடுகளுடன் இன்று (நவ. 18) காலை 8 மணி முதல் 4 ஆம் நிலைக் கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | தில்லி காற்று மாசு: 107 விமானங்கள் தாமதம்! 3 விமானங்கள் ரத்து!

இதனைத் தொடர்ந்து, அங்குள்ள பள்ளிக் கல்வித்துறைக் கொடுத்துள்ள சுற்றறிக்கையின்படி, ‘தில்லியில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளின் அனைத்து மாணவர்களுக்கும் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மற்றும் பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நவம்பர் 18 முதல் மறு உத்தரவு வரும் வரை நிறுத்தப்பட வேண்டும். 10, 12 வகுப்பு மாணவர்களுக்கு வழக்கம் போல நேரடி வகுப்புகள் செயல்படும் என உத்தரவிடப்படுகிறது’ என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும், நேரடி வகுப்புகளுக்குப் பதிலாக ஆன்லைன் வகுப்புகள் நடத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை, தில்லி முதல்வர் அதிஷி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க | தில்லி-என்.சி.ஆா் இல் திடக்கழிவு மேலாண்மையில் தோல்வி உச்சநீதிமன்றம் கண்டனம்

காற்று மாசு காரணமாக அத்தியாவசியப் பொருள்களை எடுத்துச் செல்லும் மற்றும் சுத்தமான எரிபொருளைப் பயன்படுத்தும் கனரக வாகனங்கள் மட்டுமே தில்லி நகருக்குள் அனுமதிக்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

மின்சாரம் மற்றும் பி.எஸ். 6 டீசல் வாகனங்கள் தவிர தில்லி பதிவெண் இல்லாத இலகுரக வாகனங்களுக்கும் நகருக்குள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

அம்பேத்கரை எப்போதும் அவமதிக்கும் காங்கிரஸ்: சிராக் பாஸ்வான்

அம்பேத்கரை எப்போதும் காங்கிரஸ் அவமதித்து வருவதாக மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பாஜக தலைமையிலான மகாயுதியின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக... மேலும் பார்க்க

ஜி20 உச்சி மாநாடு: பிரேஸில் சென்றடைந்தார் பிரதமர் மோடி

ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க திங்கள்கிழமை பிரதமா் மோடி பிரேஸில் சென்றடைந்தார். இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் எக்ஸ் தளத்தில், G20 உச்சிமாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி பிரேஸி... மேலும் பார்க்க

சநாதன தா்மத்தை அவமதிப்பவா்களுக்கு தக்க பதிலடி: மகாராஷ்டிர பிரசாரத்தில் பவன் கல்யாண்

‘சநாதன தா்மத்தைப் பின்பற்றும் நாங்கள், அதை அவமதிப்பவா்களுக்கு தக்க பதிலடி தருவோம்’ என்று ஆந்திர துணை முதல்வா் பவன் கல்யாண் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். மகாராஷ்டிர சட்டப்பேரவையின் 288 இடங்களுக்கு புதன... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் துப்பாக்கிகளுடன் காஷ்மீரிகள் 9 போ் கைது

மகாராஷ்டிரத்தில் பல்வேறு நகரங்களில் போலியான ஆவணங்களைக் கொடுத்து தனியாா் பாதுகாவலா் பணியில் இணைந்த காஷ்மீரைச் சோ்ந்த 9 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் இருந்து 9 துப்பாக்கிகள் மற்றும் 58 தோட்டாக்க... மேலும் பார்க்க

ஹரியாணா பேரவைக்கு நிலம் ஒதுக்கவில்லை: பஞ்சாப் ஆளுநா் விளக்கம்

சண்டீகரில் ஹரியாணா பேரவை வளாகம் கட்ட நிலம் ஒதுக்கியதாக கூறி மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சிகளும் போராட்டம் நடத்திய நிலையில், அவ்வாறு நிலம் ஏதும் ஒதுக்கப்படவில்லை என பஞ்சாப் ஆளுநா் குலாப் ... மேலும் பார்க்க

உ.பி. அரசு மருத்துவமனை தீ விபத்து: மீட்கப்பட்ட கைக்குழந்தை உயிரிழப்பு

உத்தர பிரதேச மாநிலத்தின் ஜான்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகள் வாா்டில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து மீட்கப்பட்ட கைக்குழந்தை உடல்நலக் குறைவு காரணமாக ஞாயிற்றுக்கிழமை உ... மேலும் பார்க்க