செய்திகள் :

TVK Vijay: ``2026 தேர்தலில் தருமபுரி தொகுதியில் விஜய் போட்டியிடுவார்'' -த.வெ.க மாவட்டத் தலைவர் சிவா

post image
'தமிழக வெற்றிக் கழகம்' முதல் மாநாட்டில் விஜய் உரையாற்றியது பெரும் பேசுபொருளானதை அடுத்து, விஜய் எந்தத் தொகுதியில் போட்டிடப்போகிறார் என்பதுதான் 'த.வெ.க'வினரின் எதிர்பார்ப்பாக இருந்தது.

இந்நிலையில் 'த.வெ.க' கட்சியின் தருமபுரி மாவட்டத் தலைவர் சிவா தலைமையில் நேற்று (நவம்பர் 17) தருமபுரி மாவட்ட வழக்கறிஞர்கள் பிரிவு சார்பில் கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய சிவா, வரும் 2026 தேர்தலில் தருமபுரி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட வேண்டும் விஜய்யிடம் கோரிக்கை வைத்ததாகவும், அதை விஜய் ஏற்றுக் கொண்டு அறிவிக்கச் சொன்னதாகவும் பேசியிருக்கிறார்.

சிவா

இதுகுறித்து பேசியிருக்கும் அவர், "2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழக கட்சியின் தலைவர் விஜய் தருமபுரியில் உள்ள ஐந்து தொகுதிகளில் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிடுவார் என உறுதியாகக் கூறுகிறேன். தருமபுரி மண் அதியமான் பிறந்த மண், அவ்வையார் வாழ்ந்த மண். எங்கள் தொகுதியில் நீங்கள் நின்று முதலமைச்சர் ஆக வேண்டும் என கோரிக்கை வைத்தோம். கோரிக்கையை ஏற்று தருமபுரியில், போட்டியிடுவதாக தலைவர் விஜய் உறுதி அளித்துள்ளார். 'இந்த அறிவிப்பை பொதுவெளியில் அறிவிக்கலாமா? 'என்று கேட்டேன். அதற்கு 'அறிவிப்பைக் கொடுங்கள்' என்றார் தலைவர் விஜய். இச்செய்தியை இக்கூட்டத்தின் வாயிலாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். வரலாறு காணாத மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் நமது தலைவரை வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்று பேசியிருக்கிறார் 'தமிழக வெற்றிக் கழகம்' கட்சியின் தருமபுரி மாவட்டத் தலைவர் சிவா.

'தமிழக வெற்றிக் கழகம்' கட்சியின் தலைமையிலிருந்து இது குறித்து எந்தவொரு அறிவிப்பும் அறிவிக்கப்படாத நிலையில் 'த.வெ.க' கட்சியின் தருமபுரி மாவட்டத் தலைவர் சிவா இதுகுறித்து பேசியிருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

TVK: "அதிமுகவுடன் கூட்டணியா?" -'த.வெ.க' பொதுச்செயலாளர் ஆனந்த் விளக்கம்

'தமிழக வெற்றிக் கழகம்' கட்சியின் முதல் மாநாட்டில் விஜய் கூட்டணியை வரவேற்று பேசியதிலிருந்து விஜய் யாருடன் கூட்டணி வைக்கப்போகிறார், அவருடன் யார்யார் கைகோர்க்கப் போகிறார்கள் என்பதுதான் அரசியலில் பேசுபொரு... மேலும் பார்க்க

Manipur: 6 பேர் கொலை; அதிகரிக்கும் வன்முறை... NIA விசாரணைக்கு உள்துறை உத்தரவு..! என்ன நடக்கிறது?

கடந்த திங்கட்கிழமை (11.11.2024) அன்று மணிப்பூரின் ஜிப்ராம் மாவட்டத்தில் போரோபெக்ரா என்னும் கிராமத்தில் நடந்த துப்பாக்கி சண்டையில், நிவாரண முகாமில் இருந்த மூன்று குழந்தைகள் மற்றும் மூன்று பெண்கள் உள்பட... மேலும் பார்க்க

Pa.Ranjith: "2026 தேர்தலில் களமிறங்குவோம்; நாம யாருன்னு காட்டுவோம்..." - இயக்குநர் பா.ரஞ்சித்

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், பெரம்பூரில் உள்ள வீட்டின் அருகே ஜூலை 5-ம் தேதி கொலை செய்யப்பட்ட விவகாரம் சென்னையை உலுக்கியது.இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள செம்பியம் ப... மேலும் பார்க்க

Vetrimaaran: "ஆம்ஸ்ட்ராங் ஒடுக்குமுறைக்கு எதிரானவர்" -இயக்குநர் வெற்றிமாறன்

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்கின் கொலை வழக்கு சென்னையையே உலுக்கியது.இந்நிலையில் இந்நிலையில் நேற்று (நவம்பர் 16) ஆம்ஸ்ட்ராங் பற்றிய 'காலம் தந்த தலைவர் ஆம்ஸ்ட்ராங்' என்னும் நூல... மேலும் பார்க்க

`சட்டக்கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்த வேண்டும்' - ராமதாஸ்

தமிழ்நாடு சட்டக்கல்லூரிகளில் ஆசிரியர் பணியில் ஆள் சேர்பதற்கான போட்டித்தேர்வை உடனே நடத்த வேண்டும் என்றும், சட்டக் கல்லூரி பேராசிரியர் ஆவதற்கான வயது வரம்பை அதிகரிக்க வேண்டுமென்றும் தமிழக அரசை வலியுறுத்த... மேலும் பார்க்க

வயநாடு : `மத்திய அரசின் அறிவிப்பு மனிதாபிமானமற்ற செயல்' - கேரள வருவாய்த் துறை அமைச்சர் ராஜு

கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் பெய்த பெருமழை காரணமாக கடந்த ஜூலை 30-ம் தேதி சூரல்மலை, முண்டக்கை பகுதிகளில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ... மேலும் பார்க்க