ஆராய்ச்சி மாணவர்களை மதிப்புடன் நடத்த வேண்டும்- உயர்கல்வித் துறை
Successful man: `6 ஆண்டுகளில் 8 அரசு வேலை' - கூலித்தொழிலாளி மகனின் வெற்றிக் கதை!
34 வயது, 6 ஆண்டுகளில் 8 அரசு வேலைகளுக்கான ஆஃபர் லெட்டர்களை பெற்றிருக்கும் தெலுங்கானாவைச் சேர்ந்த ராஜேஷின் கதை நிச்சயம் முன்னேற துடிக்கும் இளைஞர்களுக்கு நல்ல உதாரணம்.
தெலுங்கானா நல்லபெல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவரது அம்மா கூலித்தொழிலாளி. அப்பாவிற்கு 2014 - 2016-ம் ஆண்டில் உடல்நலம் சரியில்லாமல் ஆகி, படுத்த படுக்கை ஆகிவிட்டார்.
அப்போது, அம்மாவிற்கு உதவ ராஜேஷ் திருமண வீடுகளில் கேட்டரிங் சர்வீஸ் செய்து வந்திருக்கிறார். அப்போது அவருக்கு சம்பளம் வெறும் 100 ரூபாய்.
ஒருகட்டத்தில், 'நிலையான வருமானம் வேண்டும்' என்று அவர் எண்ணுகையில் கண்முன் வந்து நின்றிருப்பது 'அரசு வேலை'.
இதுக்குறித்து ராஜேஷ் கூறும்போது, "அரசு வேலை ஒண்ணும் அவ்வளவு ஈசி இல்ல. ஒரே ஒரு அரசு வேலைக்காக ஆயிரம்பேர் போட்டிபோடுவாங்க. அதுல, நமக்கு கிடைக்கறது ரொம்ப கஷ்டம்னு தெரியும். இருந்தாலும், அந்த ஒரு அரசு வேலை கிடைச்சுட்டா போதும். நம்ம குடும்பம் கஷ்டப்படாதுனு தோணுச்சு" என்று கூறுகிறார்.
இதன் விளைவாக, 2018-ம் ஆண்டில் இருந்து அரசு வேலைக்கான தேர்வுகளுக்கு படித்து, எழுதத் தொடங்கினேன். இவரிடம் கோச்சிங் கிளாஸ் செல்வதற்கு எல்லாம் காசு இல்லை. தானாக படிப்பதும், ஹைதராபாத்தில் இருக்கும் ஒரு நூலகமும் தான் இவரை கைத்தூக்கிவிட்டிருக்கிறது.
அந்தக் காலங்களில் படிப்பது மட்டுமல்லாமல், வீட்டிற்கு உதவ பகுதி நேர வேலைகளையும் செய்திருக்கிறார். 2018-ம் ஆண்டு முதன்முதலாக ஏதுர்நகரத்தில் உள்ள சமூக நல பள்ளியில் முதுகலை ஆசிரியராக வேலை கிடைத்துள்ளது. அதன் பின்னும், இவர் தேர்வுகள் எழுத ஊராட்சி செயலாளர், முதுகலை ஆசிரியர், பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர், உதவி புள்ளியியல் அலுவலர், விடுதி நல அலுவலர் மற்றும் குரூப் 4 துறை என அடுத்தடுத்து 6 ஆண்டுகளில் 8 அரசு வேலை கிடைத்துள்ளது.
சமீபத்தில், இளநிலை விரிவுரையாளர் வேலை கிடைத்துள்ளது. அதில் இனி சேர உள்ளார்.
இவரைப் பார்த்து இவரது தம்பியும், குரூப் 4 தேர்வு எழுதி நகராட்சியில் வேலை உள்ளார். தற்போது, இவர் குரூப் 1 தேர்வு முடிவுகளுக்கு வெயிட்டிங்.
முயற்சி திருவினையாக்கும்!