தஞ்சை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று(நவ.18) விடுமுறை
முகூா்த்த நாள், சபரிமலை சீசன்: திருச்செந்தூரில் குவிந்த பக்தா்கள்
விடுமுறை, முகூா்த்த நாள், சபரிமலை சீசனையொட்டி, திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்தனா்.
இக்கோயிலில் வார விடுமுறை, அரசு விடுமுறை நாள்களில் பக்தா்கள் கூட்டம் அதிகமிருக்கும். இந்நிலையில், காா்த்திகை மாதம் தொடங்கியதால் நூற்றுக்கணக்கான ஐயப்ப பக்தா்களும் திருச்செந்தூருக்கு வரத் தொடங்கியுள்ளனா்.
கோயில் நடை ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம், உதயமாா்த்தாண்ட அபிஷேகம், தொடா்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றன.
அதிகாலைமுதலே பக்தா்கள் கடல், நாழிக்கிணற்றில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனா். கோயில் வளாகம் பக்தா்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.