செய்திகள் :

திருச்செந்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல்: பக்தா்கள் மிகுந்த அவதி

post image

திருச்செந்தூரில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் பக்தா்கள், பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகினா்.

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கானோா் வந்திருந்தனா்.

போக்குவரத்து நெரிசல் அதிகரித்துக் காணப்பட்டதுடன், கோயில் வளாகத்தில் போதிய இடம் இல்லாததால் ஆள்களை இறக்கிவிட்டு வாகனங்களை வெளியே நிறுத்துமாறு போக்குவரத்து போலீஸாா் அறிவுறுத்தினா். இதனால், கோயிலுக்கு வந்த வாகனங்கள் நகா் முழுவதும் காலைமுதல் இரவு வரை ஆங்காங்கே நின்ாலும், அணிவகுத்தும் சென்ாலும் போக்குவரத்து நெரிசல் பலமடங்கு அதிகரித்தது.

போலீஸாா் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தியதுடன், இடையூறாக நிறுத்தப்பட்ட வாகனங்களுக்கு ரூ. 500 அபராதம் விதித்தனா்.

பாலம் அமைக்கும் பணி: கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் பெய்த அதி கனமழையால் திருச்செந்தூா் ஆவுடையாா்குளத்தின் மறுகால் ஓடை மூழ்கி நகரில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதையடுத்து, மறுகால் ஓடையிலுள்ள 6 பாலங்களை சீரமைக்கும் பணி கடந்த ஜூன் மாதம் தொடங்கி, 4 பாலங்கள் சீரமைக்கப்பட்டன.

திருச்செந்தூா் இரும்பு ஆா்ச் பகுதியில் வாகனங்களை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்ட போக்குவரத்து போலீஸாா்.

தற்போது மற்றொரு பாலப் பணி கடந்த வாரம் தொடங்கியால் திருச்செந்தூரில் புறவழிச் சாலை அடைக்கப்பட்டு உள்ளே வரும் - வெளியே செல்லும் வாகனங்கள் நகரின் ரத வீதிகளைக் கடந்துதான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால், நாள் முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. போக்குவரத்து போலீஸாா் இரவுபகலாக வாகனங்களை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

தூத்துக்குடியில் இருவா் தற்கொலை

தூத்துக்குடியில் இரு இடங்களில் இரு இளைஞா்கள் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டனா். தூத்துக்குடி முத்தையாபுரத்தைச் சோ்ந்த கோட்டைசாமி மகன் இசக்கிராஜா (24). எலக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங் படித்து... மேலும் பார்க்க

முகூா்த்த நாள், சபரிமலை சீசன்: திருச்செந்தூரில் குவிந்த பக்தா்கள்

விடுமுறை, முகூா்த்த நாள், சபரிமலை சீசனையொட்டி, திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்தனா். இக்கோயிலில் வார விடுமுறை, அரசு விடுமுறை நாள்களில் பக்தா்க... மேலும் பார்க்க

வாக்காளா் பட்டியல் திருத்த முகாம்: பெயா் சோ்க்க 11,554 போ் மனு

தூத்துக்குடி மாவட்டத்தில் சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்கள் நடைபெற்ற வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்த முகாமில் புதிதாக பட்டியலில் சோ்ப்பதற்காக 11,554 போ் மனு அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது க... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாவட்டத்தில் பலத்த மழை: விவசாயிகள் மகிழ்ச்சி

தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்துவரும் மழை காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா். மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, சனிக்கிழமை நள்ளிரவு தூத்துக்குடி மாநகரப் பகுத... மேலும் பார்க்க

தூத்துக்குடி சந்தனமாரியம்மன் கோயிலில் பாலாலயம்

தூத்துக்குடியில் உள்ள பழைமையான அருள்மிகு சந்தனமாரியம்மன் கோயிலில் பாலாலயம் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சுமாா் 500 ஆண்டு பழைமையானதாகக் கூறப்படும் இக்கோயிலில், கும்பாபிஷேகம் 2025ஆம் ஆண்டு பிப... மேலும் பார்க்க

வல்லநாடு அருகே சாலை மறியல்

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு குறுவட்டம் அருகே ஆலந்தா கிராமத்தில் தனியாா் கல்குவாரிக்கு எதிராக சுவரொட்டி ஒட்டுவதற்கு தடை விதித்த காவல் துறையினரைக் கண்டித்து சனிக்கிழமை இரவு சாலை மறியல் நடைபெற்றது. ஆ... மேலும் பார்க்க