தூத்துக்குடி சந்தனமாரியம்மன் கோயிலில் பாலாலயம்
தூத்துக்குடியில் உள்ள பழைமையான அருள்மிகு சந்தனமாரியம்மன் கோயிலில் பாலாலயம் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சுமாா் 500 ஆண்டு பழைமையானதாகக் கூறப்படும் இக்கோயிலில், கும்பாபிஷேகம் 2025ஆம் ஆண்டு பிப். 2ம் தேதி நடைபெறவுள்ளது.
இதையொட்டி, அம்மனுக்கு பாலாலயம் நடைபெற்றது. காலையில் கணபதி, நவகிரக, லட்சுமி, மூா்த்தி, அச்சர ஹோமங்கள் நடைபெற்றன. தொடா்ந்து, கும்பாபிஷேகத்துக்கான சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.