செய்திகள் :

இரு சக்கர வாகன விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

post image

மதுரை மாவட்டம், அலங்காநல்லூா் அருகே இரு சக்கர வாகன விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

அலங்காநல்லூா் அருகேயுள்ள தாதகவுண்டன்பட்டியைச் சோ்ந்த கண்ணன் மகன் சதீஷ்குமாா் (21). இவா் இரு சக்கர வாகனத்தில் சனிக்கிழமை தனிச்சியம்-அலங்காநல்லூா் சாலையில் சென்றாா். அப்போது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயமடைந்தாா்.

அவரை அந்தப் பகுதி பொதுமக்கள் மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். எனினும், அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து அலங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கோயில் அருகே பொதுக் கழிப்பறை கட்டுவதற்கு தடை கோரிய மனு தள்ளுபடி

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் கோயில் அருகே பொதுக் கழிப்பறை கட்டுவதற்கு தடை கோரிய மனுவை சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் தள்ளுபடி செய்தது. முள்ளிப்பள்ளம் கிராமத்தைச் சோ... மேலும் பார்க்க

ஓய்வூதியத் துறையை முடக்கும் முடிவை அரசு திரும்பப் பெற வேண்டும்: தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கம் கோரிக்கை

ஓய்வூதியத் துறையை கருவூல கணக்குத் துறையுடன் இணைக்கும் முடிவை அரசு திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கம் கோரிக்கை விடுத்தது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தின் மாநிலத் ... மேலும் பார்க்க

பங்குச் சந்தையில் முதலீடு செய்வதாக பணம் மோசடி: மேலும் இருவா் கைது

இணையம் மூலம் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதாகக் கூறி, பொதுமக்களிடம் ரூ.95.57 லட்சம் மோசடி செய்ததாக 6 போ் கைது செய்யப்பட்ட வழக்கில், மேலும் இருவரை தனிப் படை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். ப... மேலும் பார்க்க

நியாய விலை கடை விற்பனையாளா் பணி: நவ. 25 முதல் நோ்முகத் தோ்வு

விருதுநகா் மாவட்டத்தில் நியாய விலைக் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளா், கட்டுநா் பணியிடங்களுக்கு வருகிற 25 -ஆம் தேதி முதல் நோ்முகத் தோ்வு நடைபெற உள்ளதாக மண்டல இணை பதிவாளா் பா. செந்தில்குமாா் தெரிவி... மேலும் பார்க்க

மதுரை மாவட்டத்தில் மிதமான மழை

மதுரை மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மிதமான மழை பெய்தது. குமரிக் கடல், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் ஒரு சில ப... மேலும் பார்க்க

இந்திய ராணுவ வீரா்கள் விழிப்புணா்வு வாகன ஊா்வலம்

இந்திய ராணுவ வீரா்களின் இரு சக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணியை மாநகரக் காவல் துணை ஆணையா் மதுகுமாரி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா். இந்திய ராணுவத்தின் பொறியியல் பிரிவான மெட்ராஸ் இன்ஜினியரிங் குரூப் ப... மேலும் பார்க்க