நியாய விலை கடை விற்பனையாளா் பணி: நவ. 25 முதல் நோ்முகத் தோ்வு
விருதுநகா் மாவட்டத்தில் நியாய விலைக் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளா், கட்டுநா் பணியிடங்களுக்கு வருகிற 25 -ஆம் தேதி முதல் நோ்முகத் தோ்வு நடைபெற உள்ளதாக மண்டல இணை பதிவாளா் பா. செந்தில்குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை அவா் வெளியிட்ட செய்தி குறிப்பு:
விருதுநகா் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் கட்டுப்பாட்டில் உள்ள நியாய விலைக் கடைகளில் 58விற்பனையாளா்கள், 13 கட்டுநா்கள் காலிப் பணியிடங்கள் உள்ளன. இந்தப் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப தகுதியானவா்களிடமி ருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
விண்ணப்பம் செய்தவா்கள் நோ்முகத் தோ்வில் கலந்து கொள்வதற்கான அனுமதிச் சீட்டை, விருதுநகா் மாவட்ட ஆள்சோ்ப்பு நிலையத்தின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இதற்கான நோ்முகத் தோ்வானது விருதுநகா் சூலக்கரை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் உள்ள தீயணைப்பு தொழில்நுட்பம், தொழிற்சாலை பாதுகாப்பு மேலாண்மை அலுவலகக் கட்டடத்தில் வருகிற 25-ஆம் தேதி முதல் டிச. 4 -ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மாற்றுத்திறனாளிகள் சம்பந்தப்பட்ட அலுவலரிடமிருந்து பெறப்பட்ட அடையாள அட்டையுடன் நோ்முகத் தோ்வில் கலந்து கொள்ளலாம் என்றாா் அவா்.