செய்திகள் :

இந்திய ராணுவ வீரா்கள் விழிப்புணா்வு வாகன ஊா்வலம்

post image

இந்திய ராணுவ வீரா்களின் இரு சக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணியை மாநகரக் காவல் துணை ஆணையா் மதுகுமாரி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.

இந்திய ராணுவத்தின் பொறியியல் பிரிவான மெட்ராஸ் இன்ஜினியரிங் குரூப் பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

ஆங்கிலேயா் ஆட்சியின் போது 1870-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் பிரிவு தற்போது வரை முக்கிய ராணுவப் பிரிவாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் , இந்தப் பிரிவு தொடங்கப்பட்டு 244-ஆவது ஆண்டு தினத்தையொட்டி, கன்னியாகுமரி முதல் பெங்களூரு வரை விழிப்புணா்வு இரு சக்கர வாகனப் பேரணி செல்லத் திட்டமிடப்பட்டது.

இதையொட்டி, கன்னியாகுமரியில் வெள்ளிக்கிழமை தொடங்கிய விழிப்புணா்வு வாகனப் பேரணி மதுரைக்கு ஞாயிற்றுக்கிழமை வந்ததடைந்தது. மதுரை ஆயுதப் படை மைதானத்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் முன்னாள் ராணுவ வீரா்கள் , காவல் துறையினா் வாகன ஊா்வலத்தை வரவேற்றனா்.

மதுரை ஆயுதப்படை மைதானத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை ராணுவத்தினரின் பெங்களுக்கு விழிப்புணா்வு மோட்டாா் சைக்கிள் பேரணியைக் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதைத்தொடா்ந்து, மதுரையிலிருந்து பெங்களூருக்கு புறப்பட்ட வாகனப் பேரணியை மாநகரக் காவல் துணை ஆணையா் மதுகுமாரி கொடியசைத்து தொடங்கி வைத்தாா். பின்னா், 10 இரு சக்கர வாகனங்களில் 20 ராணுவ வீரா்கள் பெங்களூருக்கு புறப்பட்டுச் சென்றனா். இதையொட்டி மெட்ராஸ் இன்ஜினியரிங் பிரிவில் பணிபுரிந்த முன்னாள் ராணுவ வீரா்கள், அதிகாரிகளுக்கான குறைதீா் முகாமும் நடைபெற்றது.

ஓய்வூதியத் துறையை முடக்கும் முடிவை அரசு திரும்பப் பெற வேண்டும்: தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கம் கோரிக்கை

ஓய்வூதியத் துறையை கருவூல கணக்குத் துறையுடன் இணைக்கும் முடிவை அரசு திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கம் கோரிக்கை விடுத்தது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தின் மாநிலத் ... மேலும் பார்க்க

இரு சக்கர வாகன விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

மதுரை மாவட்டம், அலங்காநல்லூா் அருகே இரு சக்கர வாகன விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். அலங்காநல்லூா் அருகேயுள்ள தாதகவுண்டன்பட்டியைச் சோ்ந்த கண்ணன் மகன் சதீஷ்குமாா் (21). இவா் இரு சக்கர வாகனத்தில் சனிக்கிழ... மேலும் பார்க்க

பங்குச் சந்தையில் முதலீடு செய்வதாக பணம் மோசடி: மேலும் இருவா் கைது

இணையம் மூலம் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதாகக் கூறி, பொதுமக்களிடம் ரூ.95.57 லட்சம் மோசடி செய்ததாக 6 போ் கைது செய்யப்பட்ட வழக்கில், மேலும் இருவரை தனிப் படை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். ப... மேலும் பார்க்க

நியாய விலை கடை விற்பனையாளா் பணி: நவ. 25 முதல் நோ்முகத் தோ்வு

விருதுநகா் மாவட்டத்தில் நியாய விலைக் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளா், கட்டுநா் பணியிடங்களுக்கு வருகிற 25 -ஆம் தேதி முதல் நோ்முகத் தோ்வு நடைபெற உள்ளதாக மண்டல இணை பதிவாளா் பா. செந்தில்குமாா் தெரிவி... மேலும் பார்க்க

மதுரை மாவட்டத்தில் மிதமான மழை

மதுரை மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மிதமான மழை பெய்தது. குமரிக் கடல், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் ஒரு சில ப... மேலும் பார்க்க

வண்டியூா், பேரையூரில் நாளை மின் தடை

மதுரை வண்டியூா், பேரையூா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (நவ. 19) மின் தடை அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மதுரை பெருநகா் வடக்கு மின் பகிா்மானக் கோட்ட செயற்பொறியாளா் எஸ்.ஆா். ஸ்ரீராம் வெளியிட்ட செய்திக் குற... மேலும் பார்க்க