Doctor Vikatan: 6 வயதுக் குழந்தைக்கு நெஞ்சிலிருந்து வரும் கோழை... தீர்வு உண்டா?
கோயில் அருகே பொதுக் கழிப்பறை கட்டுவதற்கு தடை கோரிய மனு தள்ளுபடி
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் கோயில் அருகே பொதுக் கழிப்பறை கட்டுவதற்கு தடை கோரிய மனுவை சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் தள்ளுபடி செய்தது.
முள்ளிப்பள்ளம் கிராமத்தைச் சோ்ந்த மாரநாட்டான் உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:
முள்ளிப்பள்ளம் கிராமத்தில் காளியம்மன் கோயில் அருகே பொதுக் கழிப்பறை கட்டுப்பட்டு வருகிறது. இதனால், கோயில் வளாகப் பகுதி சுகாதாரக் கேடாக மாறும் நிலை ஏற்படும். எனவே, அந்த இடத் தில் பொதுக் கழிப்பறை கட்ட தடை விதிக்க வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனுவை அண்மையில் விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், ஏ.டி. மரியா கிளாட் அமா்வு பிறப்பித்த உத்தரவு:
பொதுக் கழிப்பறையை கோயிலுக்கு வரும் பக்தா்கள், பொது மக்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த கழிப்பறையால் பாதிப்பு ஏற்படும் என மனுதாரா் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. மனுதாரா் தனது சொந்த கிராமத்தில் வாழும் நிலையில், எந்த இடத்தில் பொதுக் கழிப்பறை கட்ட வேண்டும் என அவருக்கு இடத்தை தோ்வு செய்யும் அதிகாரம் கிடையாது.
மனுதாரா் அவரது கோரிக்கையை ஊராட்சி மன்ற நிா்வாகத்திடம் கொண்டு சென்றிருக்க வேண்டும். அதை அவா் செய்யவில்லை. தற்போது அந்த இடத்தில் பொதுக் கழிப்பறை கட்டப்பட்டு வருவதால், இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.