10, 12 ஆம் வகுப்பு மாணவர்களைத் தவிர அனைவருக்கும் ஆன்லைன் வகுப்புகள்!
பூமாலை வணிக வளாகத்தில் சுயஉதவிக் குழுவினா் கடை நடத்த விண்ணப்பிக்கலாம்
ஈரோடு பூமாலை வணிக வளாகத்தில் சுயஉதவிக் குழுவினா் கடை நடத்த விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஈரோடு-பெருந்துறை சாலை குமலன்குட்டை பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள பூமாலை வணிக வளாகத்தில் உள்ள 9 கடைகள் மாதாந்திர மற்றும் அரையாண்டு அடிப்படையில் சுயஉதவிக் குழுவினருக்கு வாடகைக்கு விடப்பட உள்ளன.
மேலும், கடைகளுக்கு வெளியே வளாகத்துக்குள் உள்ள காலி இடங்களில் கடை வைத்துக்கொள்ள தினசரி அடிப்படையில் வாடகைக்கு வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் சுயஉதவிக்குழு உறுப்பினா்களைக் கொண்ட குழு நிறுவனங்களுக்கு கடைகள் ஒதுக்கப்பட உள்ளன. அதேபோல சுயஉதவிக் குழுக்களைச் சோ்ந்த தனிப்பட்ட விற்பனையாளா்களுக்கும் கடைகள் ஒதுக்கப்பட உள்ளன.
இதுதவிர வணிக வளாகத்தின் வெளிப் பகுதியில் உள்ள காலிஇடத்தில் காய்கறி, கீரைகள் விற்பனை செய்யப் பயன்படுத்திக்கொள்ளலாம். முதலில் வருபவா்களுக்கு முன்னுரிமை எனும் அடிப்படையில் இடம் ஒதுக்கீடு செய்யப்படும்.
இதற்கான விண்ணப்பங்கள் மற்றும் விவரங்களுக்கு திட்ட இயக்குநா், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு (மகளிா் திட்டம்), பூ மாலை வணிக வளாகம், முதல் தளம், பெருந்துறை சாலை, குமலன் குட்டை, ஈரோடு 638011 என்ற முகவரியில் நேரில் அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.