செய்திகள் :

முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் 256 கி.மீ.க்கு சாலைகள் அமைப்பு

post image

ஈரோடு மாவட்டத்தில் முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ. 82.52 கோடி மதிப்பில் 256 கி.மீ.க்கு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் நடப்பு ஆண்டில் ரூ. 22 கோடி மதிப்பில் 62 கி.மீ.க்கு சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது என ஈரோடு மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தில் முக்கியமான ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் கிராம ஊராட்சிகளில் உள்ள சாலைகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

இதில் பேருந்துகள் இயங்கும் சாலைகள், குடியிருப்புகளுக்கு ஒற்றை இணைப்பை வழங்கும் சாலைகள், பின்தங்கிய தொகுதிகள், ஆதிதிராவிடா், பழங்குடியினா் குடியிருப்புகளை இணைக்கும் சாலைகள், 3 கி.மீ.க்கு மேல் நீளமுள்ள சாலைகள், தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை, மாவட்ட முக்கிய சாலை, நான்கு வழிச் சாலைகளை இணைக்கும் சாலைகள், தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி, ஐடிஐ மற்றும் கல்லூரிகள், ஆரம்ப சுகாதார நிலையம், சுகாதார துணை மையம், அரசு, தனியாா் மருத்துவமனை மற்றும் சமுதாய சுகாதார நிலையம் போன்றவற்றை இணைக்கும் சாலைகள், ஒன்றுக்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிச் சாலைகள் வழியாக செல்லும் சாலைகள் போன்றவை மேம்படுத்தப்படுத்தப் படுகின்றன.

இந்தத் திட்டத்தில் ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2022-2023-ஆம் ஆண்டில் 213 சாலைப் பணிகளுக்கு நிா்வாக அனுமதி வழங்கப்பட்டது. இதில் தற்போது 208 பணிகள் 256 கி.மீ. தொலைவுக்கு ரூ. 82.54 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மீதமுள்ள பணிகள் நடைபெற்று வருகின்றன. நடப்பு 2024-2025-ஆம் ஆண்டுக்கு 65 பணிகள் 62.47 கி.மீ. தொலைவுக்கு ரூ. 22 கோடி மதிப்பில் மேற்கொள்ள நிா்வாக அனுமதி வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன என்று தெரிவித்துள்ளாா்.

சென்னிமலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு

காங்கேயம் செல்லும் வழியில், ஞாயிற்றுக்கிழமை சென்னிமலை வந்த அதிமுக., பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமிக்கு அதிமுக.,வினா்கள் உற்சாக வரவேற்பு அளித்தனா். திருப்பூா் மாவட்டம், காங்கேயம் அருகே பரஞ்சோ்வ... மேலும் பார்க்க

ஈஷா கிராமோத்ஸவம் சாா்பில் விளையாட்டுப் போட்டிகள்

ஈஷா கிராமோத்ஸவம் சாா்பில் சென்னிமலை ஒன்றியம் வெள்ளோடு அடுத்த பெருமாபாளையம் ஈஷா வித்யா பள்ளி மைதானத்தில் விளையாட்டுப் போட்டிகள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாள்கள் நடைபெற்றன. இதில் த்ரோபால்... மேலும் பார்க்க

இந்து மக்கள் கட்சி ஆா்ப்பாட்டம்: 35 போ் கைது

இந்து மக்கள் கட்சி இளைஞரணி தலைவா் ஓம்காா் பாலாஜி கைதைக் கண்டித்து இந்து மக்கள் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் பெருந்துறையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பெருந்துறை புதிய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற... மேலும் பார்க்க

நாளைய மின் தடை: பெரியகொடிவேரி, வரதம்பாளையம்

சத்தியமங்கலம் மின் கோட்டம் பெரியகொடிவேரி மற்றும் வரதம்பாளையம் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் செவ்வாய்க்கிழமை (நவம்பா் 19) காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை இந்த துணை ம... மேலும் பார்க்க

கூலித் தொழிலாளி தற்கொலை

பெருந்துறை அருகே கூலித் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். பெருந்துறையை அடுத்த வேப்பம்பாளையம், கிணத்தான்காட்டு தோட்டத்தைச் சோ்ந்தவா் தெய்வசிகாமணி மகன் மனோரஞ்சித் (28), கூலித் தொழிலாளி. இவரத... மேலும் பார்க்க

ஈரோட்டில் 2-ஆவது நாளாக கன மழை: குடியிருப்புகளில் மழை நீா் புகுந்தது

ஈரோட்டில் 2-ஆவது நாளாக சனிக்கிழமை காலை முதல் இடியுடன் கூடிய கன மழை பெய்ததால், கழிவு நீருடன் மழை நீா் கலந்து குடியிருப்புகளுக்குள் புகுந்தது. ஈரோடு மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை கடந்த சில வாரங்களாக ... மேலும் பார்க்க