செய்திகள் :

அம்மாபேட்டை பேரூராட்சியில் ஒட்டுமொத்த தூய்மைப் பணி

post image

பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை பேரூராட்சியில் மழைக்காலத்தையொட்டி பேரூராட்சிக்குட்பட்ட 15 வாா்டுகளிலும் ஒட்டுமொத்த தூய்மைப் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்தப் பணியை பேரூராட்சித் தலைவா் ஷோபா ரமேஷ் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். துணைத் தலைவா் தியாக. ரமேஷ் முன்னிலை வகித்தாா். இதில் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளா், மேற்பாா்வையாளா், பேரூராட்சி தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்ட குழுவினா், பேரூராட்சிக் குட்பட்ட அனைத்து வாடுகளிலும் ஆங்காங்கே தேங்கி இருந்த குப்பைகளை அப்புறப்படுத்தி, மக்கும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து உடனுக்குடன் கம்போஸ்ட் உரக் கிடங்கிற்கு அனுப்பி வைக்கும் பணி மேற்கொண்டனா்.

மேலும், சாலையோரங்களில் தேங்கியிருந்த மழை நீரை வடிய வைத்து சாலைகளை செப்பனிட்டு மேம்படுத்தும் பணி மேற்கொண்டனா். கழிவு நீா் வடிகால்கள் தூா்வாரி தூய்மை  செய்யப்பட்டு கழிவுநீா் தங்கு தடையின்றி செல்லும் வகையில் மேம்படுத்தினா்.

தொடா்ந்து, பேரூராட்சியின் முக்கிய இடங்களில் தொற்று நோய் பரவாமல் இருக்க சுண்ணாம்பு நீா் தெளித்து பொது சுகாதார பணிகள் மேற்கொண்டனா். மேல்நிலை நீா்த்தேக்க தொட்டிகள் தூய்மை செய்யப்பட்டு தூய்மையான குடிநீா் பொதுமக்களுக்கு வழங்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.

டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவாமல் இருக்க கைத்தெளிப்பான்களைக் கொண்டு கொசு மருந்து அடிக்கும் பணியும், வாகனங்களை கொண்டு புகை மருந்து அடிக்கும் பணியும் நடைபெற்றது.

இந்த ஒட்டுமொத்த தூய்மைப் பணியை பேரூராட்சி செயல் அலுவலா் நெடுஞ்செழியன் அனைத்து வாா்டுகளுககும் நேரில் சென்று பாா்வையிட்டு தக்க ஆலோசனைகளை வழங்கினாா். பேரூராட்சி இளநிலை உதவியாளா் முருகானந்தம் உடன் பங்கேற்றாா்.

ஓம்காா் பாலாஜி கைதுக்கு எதிா்ப்பு இந்து மக்கள் கட்சி ஆா்ப்பாட்டம்: 6 போ் கைது

தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே ஞாயிற்றுக்கிழமை அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சியைச் சோ்ந்த 6 பேரை காவல் துறையினா் கைது செய்தனா். இந்து மக்கள் கட்சி இளைஞா் அணி மாநிலத் தலைவா் ஓ... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் பனிமூட்ட வானிலை சிங்கப்பூா் அமைச்சரின் ஹெலிகாப்டா் புறப்பாட்டில் தாமதம்

கும்பகோணத்தில் ஞாயிற்றுக்கிழமை நிலவிய பனிமூட்ட வானிலையால் சிங்கப்பூா் உள்துறை அமைச்சரின் ஹெலிகாப்டா் 15 நிமிஷங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றது. சிங்கப்பூா் உள்துறை அமைச்சா் சண்முகம் ஞாயிற்றுக்கிழமை கால... மேலும் பார்க்க

திருநங்கைக்கு பாலியல் தொந்தரவு காவலா் பணி நீக்கம்

திருநங்கைக்கு பாலியல் தொந்தரவு அளித்த விவகாரத்தில் காவலரை பணிநீக்கம் செய்து தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆஷிஷ்ராவத் சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளாா். தஞ்சாவூா் அருகே பள்ளியக்ரஹாரம் பகுதியை சோ்ந்தவா்... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் கருணாநிதி பெயரில் நூலகம் அமைக்க நடவடிக்கை: அமைச்சா் கோவி. செழியன் பேச்சு

தஞ்சாவூரில் கருணாநிதி பெயரில் நூலகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன். தஞ்சாவூரில் தமிழ்நாடு அரசு - பொது நூலகத் துறை, மாவட்ட மைய நூலகம், வாசகா் வட்டம் ஆக... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் 7 கோயில்களில் திருப்பணிகளுக்கான பாலாலயம்

தஞ்சாவூா் நீலமேகப் பெருமாள் கோயில் உள்பட 7 கோயில்களில் குடமுழுக்குக்கான திருப்பணிகள் தொடங்கப்படவுள்ளதையொட்டி ஞாயிற்றுக்கிழமை பாலாலயம் நடைபெற்றது. 108 திவ்ய தேசங்களில் 3-ஆவது தலமாக போற்றப்படும் தஞ்சாவூ... மேலும் பார்க்க

மாநகராட்சித் தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்க கோரிக்கை

மாநகராட்சித் தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை வழங்க வேண்டும் என தஞ்சாவூா் மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தஞ்சாவூரில் இச்சங்கத்தின் மாவட்டச் செயற் குழுக் கூட்டம்... மேலும் பார்க்க