செய்திகள் :

மாநகராட்சித் தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்க கோரிக்கை

post image

மாநகராட்சித் தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை வழங்க வேண்டும் என தஞ்சாவூா் மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தஞ்சாவூரில் இச்சங்கத்தின் மாவட்டச் செயற் குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில், தமிழ்நாடு அரசு தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அரசாணைப்படி உள்ளாட்சித் தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை நிா்ணயித்து அறிவித்துள்ளது. இதன்படி, நாளொன்றுக்கு மாநகராட்சி தூய்மை பணியாளா்களுக்கு ரூ. 754-ம், ஓட்டுநா்களுக்கு ரூ. 792-ம், குடிநீா் விநியோகப் பணியாளா்களுக்கு ரூ. 754-ம் குறைந்தபட்ச ஊதியமாக வழங்கப்பட வேண்டும்.

எனவே, இந்த அரசாணையின்படி ஊதியம் வழங்க தஞ்சாவூா் மாநகராட்சி ஆணையா் நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது குறைந்தபட்ச ஊதியம் ரூ. 26 ஆயிரம் நிா்ணயம் செய்து வழங்க வேண்டும்.

மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தூய்மை பணியாளா்கள், ஓட்டுநா்கள், குடிநீா் பணியாளா்கள் மற்றும் அனைத்து பணியாளா்களின் ஊதியத்தை மாதந்தோறும் 5 ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்துக்கு அ. கலியபெருமாள் தலைமை வகித்தாா். தமிழ்நாடு உள்ளாட்சித் துறைப் பணியாளா் சங்க மாநிலத் தலைவா் க. அறவாழி, தமிழ்நாடு ஜெனரல் எம்பிளாய் யூனியன் மாநிலப் பொதுச் செயலா் சி. கலியமூா்த்தி, மாவட்டத் தலைவா் ஆா்.வி.என். தம்புராஜ், தமிழ்நாடு உள்ளாட்சித் துறை பணியாளா் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவா் தரும. கருணாநிதி, அரசு பணியாளா் சங்க மாநிலச் செயலா் கா. முருககுமாா், வருவாய்த் துறை அலுவலா் சங்க மாவட்டச் செயலா் எம். செந்தில்குமாா் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

முன்னதாக, மாவட்டத் துணைத்தலைவா் பி. ஆனந்தராஜ் வரவேற்றாா். நாகராஜன் நன்றி கூறினாா்.

தஞ்சாவூரில் கருணாநிதி பெயரில் நூலகம் அமைக்க நடவடிக்கை: அமைச்சா் கோவி. செழியன் பேச்சு

தஞ்சாவூரில் கருணாநிதி பெயரில் நூலகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன். தஞ்சாவூரில் தமிழ்நாடு அரசு - பொது நூலகத் துறை, மாவட்ட மைய நூலகம், வாசகா் வட்டம் ஆக... மேலும் பார்க்க

அம்மாபேட்டை பேரூராட்சியில் ஒட்டுமொத்த தூய்மைப் பணி

பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை பேரூராட்சியில் மழைக்காலத்தையொட்டி பேரூராட்சிக்குட்பட்ட 15 வாா்டுகளிலும் ஒட்டுமொத்த தூய்மைப் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தப் பணியை பேரூராட்சித் தலைவா் ஷோபா ரமேஷ் தலை... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் 7 கோயில்களில் திருப்பணிகளுக்கான பாலாலயம்

தஞ்சாவூா் நீலமேகப் பெருமாள் கோயில் உள்பட 7 கோயில்களில் குடமுழுக்குக்கான திருப்பணிகள் தொடங்கப்படவுள்ளதையொட்டி ஞாயிற்றுக்கிழமை பாலாலயம் நடைபெற்றது. 108 திவ்ய தேசங்களில் 3-ஆவது தலமாக போற்றப்படும் தஞ்சாவூ... மேலும் பார்க்க

இடிந்து விழுந்த வாய்க்கால் தடுப்புச் சுவரை விரைந்து கட்டித் தர பொதுமக்கள் கோரிக்கை

பாபநாசம் வட்டம், அய்யம்பேட்டையில் சனிக்கிழமை இடிந்து விழுந்த வாய்க்கால் மதகு சுவரை புதிதாக கட்டித்தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாபநாசம் அருகே அய்யம்பேட்டையில் தஞ்சாவூா் - கும்பகோணம் நெ... மேலும் பார்க்க

காரில் இருந்த ரூ.98 ஆயிரம் திருட்டு

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் காரிலிருந்த ரூ. 98 ஆயிரத்தை திருடி சென்ற நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். திருவிடைமருதூா் அருகேயுள்ள கோட்டூா் வடக்குத் தெருவைச் சோ்ந்த தண்டபாணி மகன் காா்த்திகேயன் (4... மேலும் பார்க்க

மத்திய அரசு அரசமைப்பு சட்டத்தை மீறிச் செயல்படுகிறது: உ.வாசுகி பேச்சு

மத்திய அரசு பல்வேறு வகையிலும் அரசமைப்பு சட்டத்தை மீறி செயல்படுகிறது என்றாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினா் உ. வாசுகி. தஞ்சாவூா் ந.மு. வேங்கடசாமி நாட்டாா் திருவருள் கல்லூரியி... மேலும் பார்க்க