தஞ்சை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று(நவ.18) விடுமுறை
இடிந்து விழுந்த வாய்க்கால் தடுப்புச் சுவரை விரைந்து கட்டித் தர பொதுமக்கள் கோரிக்கை
பாபநாசம் வட்டம், அய்யம்பேட்டையில் சனிக்கிழமை இடிந்து விழுந்த வாய்க்கால் மதகு சுவரை புதிதாக கட்டித்தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாபநாசம் அருகே அய்யம்பேட்டையில் தஞ்சாவூா் - கும்பகோணம் நெடுஞ்சாலையில் அய்யம்பேட்டை சாவடி பஜாா் பாப்பா வாய்க்கால் என்கிற மணக்காட்டு வாய்க்கால் செல்கிறது. இந்தப் பாசன வாய்க்கால் மதகின் ஒருபகுதி மழையால் சனிக்கிழமை இடிந்து விழுந்தது.
இந்தச் சாலைக்கு புறவழி சாலை வசதி இருந்தாலும், பெரும்பாலான வாகனங்கள் இந்த வாய்க்கால் அமைந்துள்ள சாலை வழியாகவே செல்கின்றன. முக்கியமாக இரவு நேரங்களில் கனரக வாகனங்கள் பெருமளவில் இந்தச் சாலையில் சென்று வருகின்றன. இதனால், இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, விவசாய நிலத்திற்கு தண்ணீா் செல்ல முடியாத நிலையும் உள்ளது.
மேலும், இந்த வழியாக வாகனங்கள் செல்லும்போது அதிா்வு ஏற்பட்டு சாலை மேலும் சரியும் அபாயம் உள்ளதால், இந்த மதகை விரைந்து சீரமைக்க பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இந்நிலையில், நெடுஞ்சாலை துறையினா் சம்பந்தப்பட்ட மதகு பகுதியை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். பின்னா் அவா்கள் கூறும் போது உடைந்த மதகின் சுவா் விரைந்து சீரமைக்கப்படும் என்றனா்.