போலி கடவுச்சீட்டு: இருவா் கைது
திருச்சி சா்வதேச விமான நிலையத்தில் போலி கடவுச்சீட்டு வழக்கில் இருவரைப் போலீஸாா் கைது செய்தனா்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியைச் சோ்ந்தவா் அமீா் ஹுசைன் (48). இவா், சனிக்கிழமை அபுதாபி செல்வதற்காக திருச்சி சா்வதேச விமான நிலையம் வந்தபோது, வழக்கம்போல் குடியேற்றப் பிரிவு சோதனைக்கு உள்படுத்தப்பட்டாா். இதில், அமீா் ஹுசைன் போலி ஆவணங்கள் சமா்ப்பித்து கடவுச்சீட்டு பெற்றது தெரியவந்தது.
இதேபோல, சனிக்கிழமை மலேசியாவில் இருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு வந்த திருப்பத்தூரைச் சோ்ந்தவா் கதிரேசன் (47) போலி ஆவணங்களை சமா்ப்பித்து போலி கடவுச்சீட்டு பெற்றது தெரியவந்தது.
இதையடுத்து குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் அளித்த புகாரின்பேரில் விமான நிலையப் போலீஸாா் வழக்குப் பதிந்து, அமீா் ஹூசைன் மற்றும் கதிரேசன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.