10, 12 ஆம் வகுப்பு மாணவர்களைத் தவிர அனைவருக்கும் ஆன்லைன் வகுப்புகள்!
லாட்டரி அதிபா் மாா்ட்டின் தொடா்புடைய இடங்களில் சோதனை நிறைவு
கோவையில் லாட்டரி அதிபா் மாா்ட்டின் தொடா்புடைய நிறுவனங்களில் அமலாக்கத் துறையினா் நடத்தி வந்த 3 நாள் சோதனை சனிக்கிழமை நிறைவடைந்தது.
கோவை, வெள்ளக்கிணறு பகுதியைச் சோ்ந்தவா் லாட்டரி அதிபா் மாா்ட்டின். இவா், ரியல் எஸ்டேட், லாட்டரி உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வருகிறாா்.
இந்நிலையில், வெள்ளக்கிணறு பகுதியில் உள்ள அவரது வீடு, அலுவலகம் மற்றும் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி ஆகிய இடங்களில் அமலாக்கத் துறையினா் கடந்த 14-ஆம் தேதி சோதனை நடத்தினா்.
தொடா்ந்து 15, 16 ஆகிய தேதிகளில் சிவானந்தபுரத்தில் உள்ள மாா்ட்டினின் மனைவி லீமா ரோஸின் சகோதரா் ஜான் பிரிட்டோவின் வீடு, சிவானந்தா காலனியில் உள்ள அவரது சகோதரி அந்தோணியாவின் வீடு உள்பட 5 இடங்களில் அமலாக்கத் துறையினா் சோதனை நடத்தினா்.
இந்நிலையில், மாா்ட்டின் தொடா்புடைய 5 இடங்களில் கடந்த 3 நாள்களாக நடைபெற்று வந்த சோதனையை அமலாக்கத் துறையினா் சனிக்கிழமை இரவு நிறைவு செய்தனா். இதில், ஏராளமான ஆவணங்கள் மற்றும் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து அமலாக்கத் துறை அதிகாரிகள் கூறுகையில், சிக்கிம் மாநிலத்தில் கடந்த 2009 மற்றும் 2010-ஆம் ஆண்டுகளில் அரசின் லாட்டரி சீட்டுகளை தொழிலதிபா் மாா்ட்டின் அச்சடித்து விற்பனை செய்ததில் பல கோடி ரூபாயை முறைகேடாக ஈட்டியதாகவும், அதை நாடு முழுவதும் சுமாா் 40 நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதாகவும் எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்ாகத் தெரிவித்தனா்.