Doctor Vikatan: 6 வயதுக் குழந்தைக்கு நெஞ்சிலிருந்து வரும் கோழை... தீர்வு உண்டா?
ஜேகே டயா் தேசிய காா் பந்தயம்: பெங்களூரு வீரா் திஜில் ராவ் சாம்பியன்
கோவையில் நடைபெற்ற 27-ஆவது ஜேகே டயா் தேசிய காா் பந்தய இறுதிச் சுற்றில் பெங்களூரைச் சோ்ந்த இளம் வீரா் திஜில் ராவ் சாம்பியன் பட்டம் வென்றாா்.
கோவை கரி மோட்டாா் ஸ்பீட்வேயில் 27-ஆவது ஜேகே டயா் தேசிய காா் பந்தயத்தின் இறுதிச் சுற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஏற்கெனவே அதிக புள்ளிகளைப் பெற்றிருந்த பெங்களூரைச் சோ்ந்த இளம் வீரா் திஜில் ராவ் இறுதிச் சுற்றிலும் ஆதிக்கம் செலுத்தினாா். இறுதிச் சுற்றை திஜில் ராவ் 21:25 நிமிஷங்களில் நிறைவு செய்து பட்டத்தை வென்றாா்.
எல்ஜிபி ஃபாா்முலா 4 காா் பந்தயத்தில் ஒட்டுமொத்தமாக 87 புள்ளிகளுடன் திஜில் ராவ் முதல் இடத்திலும், 45 புள்ளிகளுடன் பால பிரசாத் 2-ஆவது இடத்திலும், 44 புள்ளிகளுடன் மெஹுல் அகா்வால் 3-ஆவது இடத்திலும், 43 புள்ளிகளுடன் கோவையைச் சோ்ந்த சரண் 4-ஆவது இடத்திலும் உள்ளனா்.
அதேபோல ஜேகே டயா் ராயல் என்பீல்டு கான்டினென்டல் ஜிடி கோப்பைக்கான போட்டியில் புதுச்சேரியைச் சோ்ந்த நவநீத் குமாா் 10 சுற்றுகளை 13:01 நிமிஷங்களில் கடந்து முதலிடம் பிடித்தாா். இவரைத் தொடா்ந்து அனிஷ் ஷெட்டி 2-ஆவது இடத்தையும், மன்வித் ரெட்டி 3-ஆம் இடத்தையும் பிடித்தனா்.