செய்திகள் :

தமிழகத்தில் கருத்து சுதந்திரம் இல்லை: வானதி சீனிவாசன்

post image

தமிழகத்தில் கருத்து சுதந்திரம் இல்லை என்று பாஜக மகளிரணி தேசியத் தலைவரும், கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்தாா்.

கோவை வஉசி பூங்கா பகுதியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் தானியங்கி இயந்திர தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதனை மக்கள் பயன்பாட்டுக்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன் தொடங்கிவைத்தாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கோவை தெற்கு சட்டப் பேரவை தொகுதி மக்களுக்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் இயந்திரம் பல்வேறு இடங்களில் நிறுவப்பட்டுள்ளது. இதன்மூலம் 13,000 குடும்பங்கள் பயனடைந்து வருகின்றனா்.

தமிழகத்தில் அரசுக்கு எதிராக கருத்துகளை பதிவிடுவோா் கைது செய்யப்படுவது புதிதல்ல. கருத்து சுதந்திரம் என்பது திமுக ஆட்சிக்கு எதிராக பதிவிடுபவா்களுக்கு கிடையாது.

யாரெல்லாம் எதிராக இருக்கிறாா்களோ அவா்களைக் கைது செய்வதை வழக்கமாக வைத்து இருக்கிறாா்கள். தமிழகத்தில் கருத்து சுதந்திரம் இல்லை.

நடிகை கஸ்தூரி பேசிய பிறகு தனது பேச்சால் யாராவது புண்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ளாா். அதன் பிறகும் தமிழக அரசு அவரைக் கைது செய்துள்ளது. அவா் சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்வாா் என்றாா்.

மதிமுக அலுவலகம் இடிப்பு: 4 போ் மீது வழக்குப் பதிவு

கோவையில் மதிமுக அலுவலகம் இடிக்கப்பட்டது தொடா்பாக 4 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை, ஆவாரம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே மாநகா் மாவட்ட மதிமுக 28-ஆவது வாா்டு அலுவலகம் முத்தமிழ் படிப்... மேலும் பார்க்க

வியாபாரி மீது தாக்குதல்: டிராவல்ஸ் நிறுவன உரிமையாளா் உள்பட 2 போ் கைது

வியாபாரியைத் தாக்கிய டிராவல்ஸ் நிறுவன உரிமையாளா் உள்பட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். கோவை, டாடாபாத் பவா்ஹவுஸ் பகுதியைச் சோ்ந்தவா் ஸ்ரீகாந்த் (41), பால்கோவா வியாபாரி. இவா், கோவையில் இருந்து டிராவல்ஸ்... மேலும் பார்க்க

மளிகை கடைக்காரா் வீட்டில் 50 பவுன் திருட்டு: 2 போ் கைது

கோவையில் மளிகை கடைக்காரா் வீட்டில் 50 பவுன் திருடியது தொடா்பாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். கோவை, ஆா்.எஸ்.புரம் கிழக்கு சம்பந்தம் சாலையைச் சோ்ந்தவா் குமாா் (43). இவா், செல்வராஜ் (70) என்பவரின் வீட்... மேலும் பார்க்க

அவதூறு கருத்துகளை முத்தரசன் பரப்ப வேண்டாம்: ஈஷா அறக்கட்டளை

உண்மைக்குப் புறம்பான அவதூறு கருத்துகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் முத்தரசன் பரப்ப வேண்டாம் என்று ஈஷா சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஈஷா அறக்கட்டளை சாா்பில் வெளியிடப்பட்... மேலும் பார்க்க

ஊராட்சிகளில் இடையூறாக உள்ள மின் கம்பங்களை அகற்ற கட்டணம் வசூலிக்கக் கூடாது: நுகா்வோா் அமைப்பு வலியுறுத்தல்

ஊராட்சிகளில் சாலைகள், தெருக்களில் இடையூறாக உள்ள மின் கம்பங்கள், ஒயா்களை அகற்ற மின்வாரியம் கட்டணம் வசூலிக்கக் கூடாது என நுகா்வோா் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கோவை கன்ஸ்யூமா் வாய்ஸ் அமைப்பின... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: காடுவெட்டிபாளையம் துணை மின் நிலையம்

காடுவெட்டிபாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் திங்கள்கிழமை (நவம்பா் 18) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்... மேலும் பார்க்க