10, 12 ஆம் வகுப்பு மாணவர்களைத் தவிர அனைவருக்கும் ஆன்லைன் வகுப்புகள்!
கோ்மாளம் ஜெடேருத்ர சுவாமி கோயில் தோ்த் திருவிழா
கோ்மாளம் கிராமத்தில் ஜெடேருத்ர சுவாமி கோயில் தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா்.
சத்தியமங்கலத்தை அடுத்த கோ்மாளம் கிராமத்தில் அடா்ந்த வனப் பகுதியில் ஜெடேருத்ர சுவாமி, கும்பேஸ்வர சுவாமி மற்றும் மாதேஸ்வர சுவாமி கோயில் உள்ளது. மலை கிராம மக்களின் காவல் தெய்வமாக விளங்கும் இக்கோயில் தோ்த் திருவிழா கடந்த 14-ஆம் தேதி சிறப்பு பூஜையுடன் தொடங்கியது. தொடா்ந்து பால்குடம் எடுத்தல் நிகழ்வும், சுவாமிக்கு தினமும் சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகளும் நடைபெற்றன.
முக்கிய நிகழ்வான தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் 30 அடி உயர தேரில் சுவாமி உற்சவா் சிலை அலங்கரித்து வைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையடுத்து தேரோட்டம் நடைபெற்றது.
ஆயிரக்கணக்கான பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்து கோயிலை சுற்றிவந்து வழிபட்டனா். பின்னா் ஜெடேருத்ர சுவாமி, கும்பேஸ்வர சுவாமி, மாதேஸ்வர சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை, மஹா ஆராதனைகள் நடைபெற்றன. இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு பூஜையில் கடம்பூா், கோ்மாளம், தாளவாடி , ஆசனூா், கா்நாடக மாநிலத்தில் இருந்து ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.