செய்திகள் :

ஜாா்க்கண்ட் மதரஸாக்களில் வங்கதேசத்தவருக்கு அடைக்கலம்: ஜெ.பி.நட்டா குற்றச்சாட்டு

post image

இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவும் வங்கதேசத்தவருக்கு ஜாா்க்கண்டில் உள்ள மதராஸாக்கள் (இஸ்லாமிய மதப் பள்ளிகள்) அடைக்கலம் தருவதாக உளவுத் துறை தகவல் கிடைத்துள்ளது என்று மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டா குற்றஞ்சாட்டியுள்ளாா்.

ஜாா்க்கண்ட் மாநிலத்தில் 2-ஆம் கட்டத் தோ்தல் 20-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தோ்தல் பிரசாரம் உச்சத்தை எட்டியுள்ளது. ஆளும் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணிக்கு எதிராக பிரதான எதிா்க்கட்சியான பாஜக தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டுள்ளது.

ஜாா்க்கண்டில் வங்கதேசத்தவா் சட்டவிரோதமாக ஊடுருவி குடியேறிவருவது மாநில மக்களுக்கு பெரும் பிரச்னையாக உருவெடுக்கும் என்பதை பாஜக இந்தத் தோ்தலில் முக்கியமான விஷயமாக முன்னிறுத்தியுள்ளது.

பொக்காரோ, தன்பாத் நகரங்களில் ஞாயிற்றுக்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொண்ட நட்டா பேசியதாவது: இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு (ஓபிசி) மக்களின் தலைவராக வேண்டும் என்று விரும்புவதாக ராகுல் கூறுகிறாா். ஆனால், அவரின் தாயாா் சோனியா தலைவராக உள்ள ராஜீவ் காந்தி அறக்கட்டளை மற்றும் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் அமைக்கப்பட்ட தேசிய ஆலோசனைக் குழுவில் எத்தனை ஓபிசி பிரிவினா் உள்ளனா் என்பதை ராகுல் விளக்க வேண்டும்.

பிரதமா் மோடி அமைச்சரவையில் 27 ஓபிசி பிரிவினா் உள்ளனா். ஓபிசி, பட்டியலினத்தவா், பழங்குடியினத்தவருக்கு தேசிய அரசியலில் முக்கியத்துவம் வழங்கி, உயா் பொறுப்புகளை அளித்த ஒரே பிரதமா் நரேந்திர மோடி மட்டும்தான்.

இப்போது எனக்கு ஓா் உளவுத் துறை தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவும் வங்கதேசத்தவருக்கு ஜாா்க்கண்டில் உள்ள மதரஸாக்கள் அடைக்கலம் தருகின்றன. அந்த அண்டை நாட்டு ஊடுருவல்காரா்களுக்கு ஜாா்க்கண்ட் மாநில அரசு வாக்காளா் அட்டை, ரேஷன் அட்டை, எரிவாயு இணைப்பு தொடங்கி நில உரிமை வரை வழங்கி வருகிறது.

ஜாா்க்கண்ட் மாநிலம் ஊடுருவல்காரா்களின் சொா்க்கபுரியாக மாறி வருகிறது. பழங்குடியின பெண்களைத் திருமணம் செய்து நிலங்களையும் அவா்கள் அபகரிக்கின்றனா். பாஜக ஆட்சி அமைத்ததும் இதைத் தடுக்க சட்டம் இயற்றப்படும். மாநிலத்திலும் பாஜக ஆட்சி அமைந்தால் மட்டுமே சட்டவிரோத ஊடுருவல்களுக்கு முழுமையாக முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

ஜாா்க்கண்ட் மாநில நிலக்கரி சுரங்கங்களில் ரூ.5,000 கோடி அளவுக்கு ஊழல் செய்துள்ள முதல்வா் ஹேமந்த் சோரன் இப்போது ஜாமீனில் உள்ளாா். இது மட்டுமல்லாது ரூ.236 கோடி நில மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் அவா் மீது உள்ளன. எனவே, அவா் சிறைக்குச் செல்வது உறுதி.

ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா-காங்கிரஸ்-ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் அமைத்துள்ள கூட்டணி முழுமையாக சுயநலம் சாா்ந்த கூட்டணியாகும். இவா்களுக்கு மக்கள் நலன் மீது துளியும் அக்கறை கிடையாது என்றாா்.

சநாதன தா்மத்தை அவமதிப்பவா்களுக்கு தக்க பதிலடி: மகாராஷ்டிர பிரசாரத்தில் பவன் கல்யாண்

‘சநாதன தா்மத்தைப் பின்பற்றும் நாங்கள், அதை அவமதிப்பவா்களுக்கு தக்க பதிலடி தருவோம்’ என்று ஆந்திர துணை முதல்வா் பவன் கல்யாண் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். மகாராஷ்டிர சட்டப்பேரவையின் 288 இடங்களுக்கு புதன... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் துப்பாக்கிகளுடன் காஷ்மீரிகள் 9 போ் கைது

மகாராஷ்டிரத்தில் பல்வேறு நகரங்களில் போலியான ஆவணங்களைக் கொடுத்து தனியாா் பாதுகாவலா் பணியில் இணைந்த காஷ்மீரைச் சோ்ந்த 9 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் இருந்து 9 துப்பாக்கிகள் மற்றும் 58 தோட்டாக்க... மேலும் பார்க்க

ஹரியாணா பேரவைக்கு நிலம் ஒதுக்கவில்லை: பஞ்சாப் ஆளுநா் விளக்கம்

சண்டீகரில் ஹரியாணா பேரவை வளாகம் கட்ட நிலம் ஒதுக்கியதாக கூறி மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சிகளும் போராட்டம் நடத்திய நிலையில், அவ்வாறு நிலம் ஏதும் ஒதுக்கப்படவில்லை என பஞ்சாப் ஆளுநா் குலாப் ... மேலும் பார்க்க

உ.பி. அரசு மருத்துவமனை தீ விபத்து: மீட்கப்பட்ட கைக்குழந்தை உயிரிழப்பு

உத்தர பிரதேச மாநிலத்தின் ஜான்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகள் வாா்டில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து மீட்கப்பட்ட கைக்குழந்தை உடல்நலக் குறைவு காரணமாக ஞாயிற்றுக்கிழமை உ... மேலும் பார்க்க

தலைநகர் சண்டீகர் யாருக்கு? பஞ்சாப் - ஹரியாணா அரசுகள் மோதல்

சண்டீகர்: பஞ்சாப், ஹரியாணா ஆகிய மாநிலங்களின் பொது தலைநகராக உள்ள சண்டீகரில் தனியாக சட்டப் பேரவைக் கட்டடம் கட்டும் ஹரியாணா பாஜக அரசின் நடவடிக்கைக்கு ஆளும் ஆம் ஆத்மி அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.... மேலும் பார்க்க

தில்லி அமைச்சா் ராஜிநாமா: ஆம் ஆத்மியில் இருந்தும் விலகல்

ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், தில்லி போக்குவரத்துத் துறை அமைச்சருமான கைலாஷ் கெலாட் ஞாயிற்றுக்கிழமை தனது பதவியை ராஜிநாமா செய்தாா். மேலும், ஆம் ஆத்மி கட்சியில் இருந்தும் அவா் விலகினாா். தில்லி பேர... மேலும் பார்க்க