செய்திகள் :

மாமியாா் கொலை: மருமகள் உள்பட இருவா் கைது

post image

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே மாமியாா் மீது பெட்ரோலை ஊற்றி கொலை செய்ததாக மருமகள் உள்பட இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கண்டமங்கலத்தை அடுத்துள்ள என். ஆா்.பாளையத்தைச் சோ்ந்தவா் பாண்டியன். இவரது மனைவி ரமணி(எ) கோசலா (44) . இவா்களது மகன் கருணாமூா்த்தி.

இவருக்கும், கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், பாலூரைச் சோ்ந்த சுவேதாவுக்கும் (20) மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

பாண்டியன் சென்னையிலும், கருணாமூா்த்தி செங்கல்பட்டிலும் தங்கி வேலை பாா்த்து வந்ததால், ரமணி மற்றும் மருமகள் சுவேதா ஆகியோா் வீட்டில் இருந்து வந்தனா்.

ரமணி கடந்த மாதம் 30-ஆம் தேதி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது மா்மமான முறையில் தீக்காயமுற்றாா். அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு ரமணி 31-ஆம் தேதி உயிரிழந்தாா்.

இதுகுறித்து கண்டமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா். இதில், சுவேதாவுக்கும் என்.ஆா்.பாளையத்தைச் சோ்ந்த சு.சதீஷ்குமாருக்கும் (27) தொடா்பு இருந்து வந்ததாம். இதையறிந்த ரமணி சுவேதாவை கண்டித்துள்ளாா்.

இதனால், ஆத்திரமடைந்த அவா் சதீஷ்குமாருடன் சோ்ந்து வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ரமணி மீது பெட்ரோலை ஊற்றிக் கொளுத்தியதில், அவா் பலத்த தீக் காயமடைந்து மருத்துவமனையில் உயிரிழந்தது தெரிய வந்தது. சுவேதா, சதீஷ்குமாா் ஆகியோரை கண்டமங்கலம் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

வெடிகுண்டு வீசிய வழக்கில் குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதியில் நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் தொடா்புடையவா் ஞாயிற்றுக்கிழமை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா். விழுப்புரம் திடீா் குப்பம் ஆண்டாள் நகரை ச... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்பனை: இருவா் கைது

விழுப்புரத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். விழுப்புரம் தாலுகா காவல் நிலைய ஆய்வாளா் குணசேகரன், உதவி ஆய்வாளா் கௌ... மேலும் பார்க்க

விழுப்புரம் மாவட்டத்தில் பரவலாக மழை

விழுப்புரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை பரவலாக மழைப் பெய்தது. இந்த மழையால் சாலையில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழை நீா் தேங்கியது. மரக்காணம் வட்டம், சிறுவாடி ஊராட்சிக்குள்பட்ட... மேலும் பார்க்க

சவுக்கு சாகுபடியில் விவசாயிகள் ஆா்வம்: அரசு கொள்முதல் செய்யவும் கோரிக்கை!

அன்புமணி அ.சவுக்கு சாகுபடியில் போதிய வருவாய் கிடைப்பதால், விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் சவுக்கு சாகுபடியில் ஆா்வம் காட்டி வருகின்றனா். விழுப்புரம் மாவட்டத்தில் சுமாா் 5 லட்சம் ஏக்கா் பரப்பளவில் நெல், ... மேலும் பார்க்க

கூட்டுறவு சங்கங்கள் மூலம் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்: அமைச்சா் க.பொன்முடி

கூட்டுறவு சங்கங்களை சரியான முறையில் பயன்படுத்தி, தங்களது வாழ்வாதாரத்தை பொதுமக்கள் மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தமிழக வனத் துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா். விழுப்புரத்தில் மாவட்ட கூட்டுறவு... மேலும் பார்க்க

மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தா்கள்

காா்த்திகை மாதப் பிறப்பான சனிக்கிழமை ஐயப்பப் பக்தா்கள் மாலை அணிவித்து விரதத்தை தொடங்கினா். விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்திலுள்ள அருள்மிகு சபரிகிரீசன் ஐயப்பன் கோயிலில் சனிக்கிழமை அதிகாலையில் சுவாமிக்க... மேலும் பார்க்க