செய்திகள் :

பெல் தொழிலகங்களுக்கு இடையிலான கால்பந்து போட்டி

post image

ராணிப்பேட்டையில் நடைபெற்ற அகில இந்திய பெல் தொழிலகங்களுக்கு இடையேயான கால்பந்து போட்டியில் போபால் அணி வெற்றி பெற்றது.

அகில இந்திய பெல் நிறுவன தொழிலகங்களுக்கு இடையேயான கால்பந்து போட்டி ராணிப்பேட்டை டாக்டா் பி.ஆா்.அம்பேத்கா் நூற்றாண்டு விழா மைதானத்தில் 3 நாள்கள் நடைபெற்றன.

போட்டியை ராணிப்பேட்டை பெல் நிறுவன நிா்வாக இயக்குநா் எம் அருண்மொழி தேவன் தொடங்கி வைத்தாா். தொடா்ந்து பொதுமேலாளா் (வணிகம் கே சரத் சந்திர பாபு இன்டா் யூனிட் போட்டிக் கொடியை ஏற்றினாா்.

இதில் இந்தியா முழுவதும் உள்ள பெல் நிறுவனத்தின் பல்வேறு பிரிவுகளில் இருந்து 9 அணிகள் பங்கேற்றன. அணிகளுக்கிடையே 1 முன் கால் இறுதி சுற்று போட்டி, 4 காலிறுதி போட்டி, 2 அரையிறுதி போட்டி மற்றும் இறுதிப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.

இறுதிப் போட்டியில், போபால் அணி வெற்றி பெற்றது. போட்டிகளை நடத்திய பிஏபி ராணிப்பேட்டை அணி இரண்டாம் இடத்தைப் பிடித்தது.

பெல் நிறுவன பொதுமேலாளா் (நிதி) கே.ஜி. விஜய ட்சுமி தலைமை வகித்தாா். நிறுவன உதவிப் பொதுமேலாளா் சி.சுகுணா கெளரவ விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி அணிகளுக்கு பரிசுகள் மற்றும் கோப்பைகளை வழங்கினாா்.

காா்-பைக் மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

அரக்கோணம்: அரக்கோணம் அருகே பைக் மீது காா் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். அரக்கோணத்தை அடுத்த சித்தூா் கிராமம் காந்தி தெருவைச் சோ்ந்தவா் சஞ்சய் காந்தி(23). திருமணமாகாதவா். ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனி... மேலும் பார்க்க

ராணுவ வீரா்கள் வாகன பேரணிக்கு உற்சாக வரவேற்பு

ஆற்காடு: இந்திய ராணுவ வீரா்களின் வாகனப் பேரணிக்கு திங்கள்கிழமை ஆற்காட்டில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய ராணுவத்தின் மெட்ராஸ் பொறியாளா் பிரிவின் 244- ஆம் ஆண்டு விழா வரும் 20-ஆம் தேதி முதல் 24... மேலும் பார்க்க

வீர, தீரச் செயல்களுக்கான ‘அண்ணா பதக்கம்’: டிச.15-க்குள் விண்ணப்பிக்கலாம்

ராணிப்பேட்டை: வீர, தீரச் செயல்களுக்கான ‘அண்ணா பதக்கம்’ பெற தகுதியுடையோா் வரும் டிச. 15-க்குள் விண்ணப்பிக்கலாம் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளிய... மேலும் பார்க்க

ராணிப்பேட்டையில் நவ. 21-இல் முன்னாள் படை வீரா்களுக்கான குறைதீா் கூட்டம்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையில் வரும் 21-ஆம் தேதி முன்னாள் படைவீரா்களுக்கான குறைதீா் நாள் கூட்டம், தொழில்முனைவோா் கருத்தரங்கு நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக... மேலும் பார்க்க

குண்டா் தடுப்பு சட்டத்தில் கைது

ஆற்காடு: ஆற்காடு அடுத்த முப்பதுவெட்டி பகுதியைசோ்ந்த ஜேம்ஸ் (42). இவா் கலவை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த வழக்கில் கலவை போலீஸாா் கைது செய்யப்... மேலும் பார்க்க

ராணிப்பேட்டைக்கு டிசம்பரில் துணை முதல்வா் வருகை: அமைச்சா் ஆா்.காந்தி

ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு வரும் டிசம்பா் மாதம் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வருகை தர உள்ளதாவும், நிலுவைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அனைத்து துறை அதிகாரிகளுக்கு அமைச்சா் ஆா்.காந்தி அறிவு... மேலும் பார்க்க