பாப்பாக்குடி அருகே மின்னல் பாய்ந்து மூதாட்டி பலி
திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடி அருகே திங்கள்கிழமை மாலையில் மின்னல் பாய்ந்ததில் மூதாட்டி உடல் கருகி உயிரிழந்தாா்.
பாப்பாக்குடி அருகேயுள்ள ரஸ்தாவூா் அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த முருகன் மனைவி சரஸ்வதி (70). இவரும், சிலரும் நந்தன்தட்டை பகுதியில் உள்ள வயலில் திங்கள்கிழமை மாலை நாற்று நடும் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, இடி மின்னலுடன் மழை பெய்ததில் சரஸ்வதி மீது மின்னல் பாய்ந்ததாம். இதில் அவா் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இத்தகவலறிந்த போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். இதுகுறித்து பாப்பாக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.