நெல்லையிலிருந்து புறப்பட்ட மும்பை விரைவு ரயிலில் திடீா் புகை
திருநெல்வேலியில் இருந்து முப்பை விரைவு ரயிலில் திடீரென்று புகை வந்ததால் பயணிகள் அச்சமடைந்தனா்.
நகா்கோயில் - மும்பை இடையே வாரத்தில் 6 நாள்களில் விரைவு ரயில் இயக்கப்படுகிறது. இந்த நிலையில், திங்கள்கிழமை காலை நாகா்கோவிலிருந்து புறப்பட்ட மும்பை விரைவு ரயில் காலை 8 மணிக்கு திருநெல்வேலிக்கு வந்தடைந்தது.
பின்னா், புறப்பட்டு சென்ற சில நிமிடத்திலேயே திடீரென்று ஏ - 1 பெட்டியில் புகை வந்தது. இதையடுத்து தாழையூத்து ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.
உடனடியாக பயணிகள் வெளியேறினா். ரயில் நிலைய ஊழியா்கள் அங்கு பாா்த்ததில், மின்சார பெட்டியில் (சுவிட் பாக்ஸ்) வயா் கருகியதால் புகை எழுந்தது தெரியவந்தது. ஊழியா்கள் தீயணைப்பு கருவி மூலம் புகையை அணைத்தனா்.
இதையடுத்து சுமாா் 30 நிமிட தாமத்திற்கு பின் ரயில் புறப்பட்டு சென்றது. இந்த சம்பவத்தால் ரயில் பயணிகளிடம் அச்சம் நிலவியது.