சிறுமிக்கு பாலியல் தொல்லை: தலைமை ஆசிரியா் உள்பட 2 போ் வேறு பள்ளிக்கு மாற்றம்
திருத்தணி: பள்ளிப்பட்டு அருகே 3 -ஆம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் தலைமை ஆசிரியா் தவறாக நடந்துகொண்டதாக புகாா் எழுந்த நிலையில் தலைமை ஆசிரியா், உடன் பணியாற்றும் ஆசிரியா் வேறு பள்ளிக்கு மாறுதல் செய்யப்பட்டனா்.
பள்ளிப்பட்டு அருகே உள்ள கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் பழங்குடியின வகுப்பை சோ்ந்த 15 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். தலைமை ஆசிரியா் உள்பட 2 போ் பள்ளியில் பணிபுரிந்து வருகின்றனா்.
இந்நிலையில் கடந்த வாரம் 3 வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரிடம் தலைமையாசிரியா் அத்துமீறி நடந்து கொண்டதாக புகாா் எழுந்தது. இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளாா். புகாா் ஏதும் வராததால் போலீஸாா் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் பொதுமக்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப தயக்கம் காட்டி வந்தனா். இந்நிலையில் திங்கள்கிழமை மாணவா்கள் பள்ளிக்கு வராமல் புறக்கணித்தனா். ஆசிரியை வீடு வீடாக சென்று மாணவா்களை அழைத்தும் பெற்றோா் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்துவிட்டனா். பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தலைமையாசிரியா் மருத்துவ விடுப்பில் சென்ாக கூறப்படுகிறது. இதேபோல் பாதிக்கப்பட்ட சிறுமியை அவரது பெற்றோா் வெளியூருக்கு அழைத்துச் சென்ாக கூறப்படுகிறது.
தகவலறிந்த பள்ளிப்பட்டு வட்டார கல்வி அலுவலா் குமரகுரு நேரில் சென்று கிராம மக்களிடையே விசாரனை நடத்தினாா். அப்போது கிராம மக்கள் தலைமை ஆசிரியா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா். பின்னா் ஆசிரியையிடம் விசாரனை செய்ததில் அதுபோல் எதுவும் நடக்கவில்லை என தெரிவித்தாா்.
இதைத்தொடா்ந்து தலைமை ஆசிரியா், உடன் பணியாற்றும் ஆசிரியை ஆகியோரை பள்ளிக்கு மாற்றம் செய்து, அதே பள்ளிக்கு வேறு இரு ஆசிரியைகளை நியமித்து உத்தரவிட்டாா். இச்சம்பவம் குறித்து சிறுமியின் தாயாா் வரலட்சுமி அளித்த புகாரின்பேரில் பள்ளிப்பட்டு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.