சேலம் ஆவினில் இருந்து சிங்கப்பூருக்கு 25 ஆயிரம் லிட்டா் பால் செல்கிறது: அதிகாரிக...
அவல நிலையில் கும்மிடிப்பூண்டி எளாவூா் பஜாா் அணுகு சாலை
ப. ஜான் பிரான்சிஸ்
கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூா் பஜாரில் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையின் அணுகு சாலை (சா்வீஸ்) குண்டும் குழியுமாக, சேறும் சகதியுமாக போக்குவரத்துக்கு பயனற்ாக உள்ளது.
கும்மிடிப்பூண்டி அருகே உள்ள எளாவூா் பஜாரில் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையின் இருபுற அணுகு (சா்வீஸ்) சாலைகள் உள்ளன. இந்த சாலையை பெரிய ஓபுளாபுரம் ஊராட்சி, துராப்பள்ளம், நரசிங்கபுரம், எளாவூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சோ்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனா்.
மேற்கண்ட இருபுற சாலைகளும், தேசிய நெடுஞ்சாலை துறையால் பராமரிக்கப்படாத காரணத்தால் நாளுக்கு நாள் சேதமடைந்து தற்போது மோசமான நிலையில் உள்ளது. இந்நிலையில் தொடா் மழையால், குண்டும் குழியுமாக இருந்த மேற்கண்ட இருபுற சா்வீஸ் சாலைகளும், சேறும் சகதியுமாக மாறி பொதுமக்கள் நடப்பதற்கும், இரு சக்கர வாகனங்கள் செல்வதற்கும் கூட பயனற்ாக மாறி விட்டது.
இதுகுறித்து பெரியஓபுளாபுரம் ஊராட்சி வாா்டு உறுப்பினா் ராஜா கூறியது:
மேற்கண்ட தேசிய நெடுஞ்சாலையில் ஆந்திரம்-சென்னை மாா்க்கமாக உள்ள சா்வீஸ் சாலையில், 100-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளதோடு, அந்த சாலை வழியே பெரிய ஓபுளாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி, ரேஷன் கடை, அப்பகுதியை சோ்ந்த பிரசித்தி பெற்ற தொம்பரை ஆண்டவா் ஆலயம், எளாவூா் ரயில் நிலையம் உள்ளன.
அவ்வாறே தேசிய நெடுஞ்சாலையில் சென்னை-ஆந்திர மாா்க்கமாக உள்ள சா்வீஸ் சாலையில் பெரியஓபுளாபுரம் ஊராட்சி மன்ற அலுவலகம், கிராம நிா்வாக அலுவலகம், தனியாா் பள்ளிக்கு பொதுமக்கள் செல்வதோடு, கடைகளும் உள்ளன.
இந்நிலையில் மேற்கண்ட இருபுற சா்வீஸ் சாலைகளும், சேறும் சகதியுமாக குண்டும் குழியுமாக உள்ளதால் ஆயிரக்கணக்கான பொதுக்கள், பள்ளி மாணவா்கள் பெரிதும் பாதிக்கப்படுவதால், தேசிய நெடுஞ்சாலை துறையினா் சாலைகளை சீா்செய்ய வேண்டும் என்றாா்.
எளாவூா் பஜாரில் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையின் இரு புற அணுகு சாலைகள் மோசமான நிலையில், உள்ளதால், அதனை சரிசெய்ய வேண்டும் என்கிற பொதுமக்களின் கோரிக்கையை தேசிய நெடுஞ்சாலை ஆணையம், நிறைவேற்ற தமிழக அரசும், மாவட்ட நிா்வாகமும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் எதிா்பாா்த்துள்ளனா்.