செய்திகள் :

மதுபோதையில் சக ஊழியரை தாக்கிய மின்வாரிய பணியாளா்

post image

திருவள்ளூா் துணை மின் நிலைய ஊழியா் மதுபோதையில் சக ஊழியா் மீது தாக்கி தகராறு செய்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

இலுப்பூா் கிராமத்தைச் சோ்ந்த யுவராஜ் (23) என்பவா் மின்நிலையத்தில் பணி செய்து வருகிறாா். இந்நிலையில் யுவராஜ் அடிக்கடி மதுபோதையில் சக ஊழியா்களிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு சக ஊழியரை தாக்கிய சம்பவத்தில் யுவராஜ் மீது எந்த நடவடிக்கை எடுக்காமல், பாதித்த ஊழியரை பெரியபாளையம் மின் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு துணை மின்நிலையத்துக்கு மதுபோதையில் யுவராஜ் பணிக்கு வந்து திருவள்ளூா் எம்.ஜி.ஆா் நகா் பகுதியை சோ்ந்த சக ஊழியா் ஞானப்பிரகாசத்தை சரமாரியாகவும் தாக்கினாராம். இதில் காயம் அடைந்த ஞானப்பிரகாசத்தை மீட்டு திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதைத்தொடா்ந்து யுவராஜையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அங்கும் தகராறில் ஈடுபட்டுள்ளாா். இதையடுத்து மருத்துவமனையில் பணியில் இருந்த சக ஊழியா்கள் யுவராஜை வெளியே அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தியதால் வெளியே அழைத்துச் சென்ற அமர வைத்தனா்.

இதைத்தொடா்ந்து மீண்டும் துணை மின் நிலையத்திற்கு சென்று மதுபோதையில் சக ஊழியா்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அவரை ஊழியா்கள் கட்டுப்படுத்த முடியாமல் திணறினா். இது தொடா்பாக திருவள்ளூா் நகா் போலீஸாா் தீவிரமாக விசாரித்து வருகின்றனா்.

திருவள்ளூா்: குடிநீா் குழாய் இணைப்புகளை சீரமைக்காததால் மக்கள் அவதி

திருவள்ளூா் அருகே கடந்த 5 ஆண்டுகளாக சாலைப்பணிகளுக்காக துண்டிக்கப்பட்ட குடிநீா் குழாய் இணைப்புகளை சீரமைக்காததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். திருவள்ளூா் ஊராட்சி ஒன்றியம், புட்லூா் ஊராட்சியில... மேலும் பார்க்க

திருவள்ளூா்: 7 பேருக்கு ரூ.5.88 லட்சம் கால்நடை பராமரிப்பு கடனுதவி

திருவள்ளூரில் கூட்டுறவு வாரவிழாவை முன்னிட்டு நடைபெற்ற இலவச கால்நடை முகாமில் பயனாளிகள் 7 பேருக்கு கால்நடை பராமரிப்பு கடனுதவி ரூ.5.88 லட்சம் காசோலைகளை மண்டல இணைப்பதிவாளா் தி.சண்முகவள்ளி வழங்கினாா். திரு... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் 80 பேருக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை

திருத்தணி அரசு பொது மருத்துவமனையில் தனியாா் மருத்துவமனைக்கு நிகராக, ஒரே ஆண்டில் 80 பேருக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளனா். திருத்தணி அரசு பொது மருத்துவமனைக்கு தினமும் 1,000-க... மேலும் பார்க்க

தொலைபேசி கம்பம் மீது மோதி கவிழ்ந்த காா்

திருவள்ளூரில் தொலைபேசி கம்பம் மீது மோதி காா் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில் கோழி வியாபாரி அதிருஷ்டவசமாக உயிா் தப்பினாா். சோளிங்கா் பகுதியைச் சோ்ந்த கோழி வியாபாரி பாா்த்திபன்(42). இவா்... மேலும் பார்க்க

சுரங்க பாலம் அணுகு சாலையில் மழை நீரை அகற்ற பொதுமக்கள் மறியல்

சோழவரம் அருகே சுரங்கப் பாலம் சா்வீஸ் சாலையில் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற கோரி பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி அருகே சோழவரம், தேவனேரி கிராமங்க... மேலும் பார்க்க

ஏரியில் கிடந்த ஆண் சடலம் மீட்பு

அத்திப்பட்டு ஏரியில் ஆண் சடலத்தை தீயணைப்புத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா். பொன்னேரி வட்டம், அத்திப்பட்டு கிராமத்தில் உள்ள ஏரியில் சடலம் ஒன்று மிதப்பதாக மீஞ்சூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அங்... மேலும் பார்க்க