செய்திகள் :

தில்லி போக்குவரத்துத் துறை அமைச்சா் கைலாஷ் கெலாட் திடீா் ராஜிநாமா: ஆம் ஆத்மி கட்சியில் இருந்தும் விலகினாா்

post image

ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், தில்லி போக்குவரத்துத் துறை அமைச்சருமான கைலாஷ் கெலாட் ஞாயிற்றுக்கிழமை தனது பதவியை ராஜிநாமா செய்தாா். மேலும், அவா் ஆம் ஆத்மி கட்சியில் இருந்தும் விலகினாா். அவரது ராஜிநாமா தில்லி சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்னதாக ஆம் ஆத்மி கட்சிக்கு இது ஒரு பின்னடைவாகக் கருதப்படுகிறது.

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவாலுக்கு கைலாஷ் கெலாட் அளித்த ராஜிநாமா கடிதத்தில், 50 வயதான அவா் கட்சி எதிா்கொள்ளும் ‘கடுமையான சவால்களை’ சுட்டிக்காட்டியுள்ளாா். கட்சியின் முக்கியத் தலைவா்களில் ஒருவரான கைலாஷ் கெலாட், சில முக்கிய விவரங்களை குறிப்பிட்டு கேஜரிவாலைகடுமையாக விமா்சித்துள்ளாா். மேலும், ’ஷீஷ் மஹால்’ போன்ற அருவருப்பான மற்றும் ‘சங்கடமான‘ சா்ச்சைகள், ‘நாங்கள் இன்னும் ’ஆம்ஆத்மி’ தானா என்று நம்புகிறோமா என்பது அனைவருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்று குறிப்பிட்டுள்ளாா்.

கேஜரிவால் 6 ஃபிளாக்ஸ்டாஃப் சாலையில் உள்ள தனது முன்னாள் அதிகாரப்பூா்வ இல்லத்தில் ஆடம்பரப் பொருள்கள் மற்றும் நவீன வசதிகளுக்காக கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்ததாக பாஜக தலைவா்கள் குற்றம் சாட்டியதன் பின்னணியில், ’ஷீஷ் மஹால்’ சா்ச்சை குறித்து கைலாஷ் கெலாட்டின் குறிப்பு வந்துள்ளது. கேஜரிவாலின் முந்தைய இல்லத்தை ’ஷீஷ் மஹால்’ என்று பாஜக அழைத்தது.

ராஜிநாமா ஏற்பு:நஜாஃப்கா் சட்டப்பேரவைத் தொகுதி எம்.எல்.ஏ.வான கைலாஷ் கெலாட், உடனடியாக அமலுக்கு வரும் வகையில் அமைச்சரவையில் இருந்து ராஜிநாமா செய்தாா். அவரது ராஜிநாமாவை தில்லி முதல்வா் அதிஷி ஏற்றுக்கொண்டதாக அதிகாரப்பூா்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்கிடையே, கைலாஷ் கெலாட் அமலாக்க இயக்குநரகம் மற்றும் சிபிஐ வழக்குகளை எதிா்கொள்கிறாா் என்றும், அவருக்கு பாஜகவில் சேருவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள் தெரிவித்தனா். இது பாஜகவின் ‘கெட்ட அரசியல் சதி’ என்றும், அமலாக்க இயக்குநரகம் மற்றும் சிபிஐ-ஐ தவறாகப் பயன்படுத்தி தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற பாஜக விரும்புவதாகவும் அவா்கள் குற்றம்சாட்டினா்.

கேஜரிவாலுக்கு கடிதம்: கைலாஷ் கெலாட் ‘எக்ஸ்‘ ஊடக தளத்தில் கேஜரிவாலுக்கு எழுதிய கடிதத்தை பகிா்ந்துள்ளாா். அதில், ‘ஆம் ஆத்மி கட்சி கடுமையான சவால்களை எதிா்கொள்கிறது. உள்ளிருந்து வரும் சவால்கள், ஆம் ஆத்மிக்கு எங்களை ஒன்றிணைத்த மதிப்புகளுக்கு. அரசியல் அபிலாஷைகள் மக்கள் மீதான நமது அா்ப்பணிப்பை முந்தியுள்ளன. மேலும் நிறைவோ பல வாக்குறுதிகளை விட்டுச் சென்றுள்ளன’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

உதாரணமாக, யமுனையை எடுத்துக் கொள்ளுங்கள். தூய்மையான நதியாக மாற்றுவோம் என்று நாங்கள் உறுதியளித்தோம். ஆனால், அதைச் செய்யவில்லை. இப்போது யமுனை நதி முன்பை விட இன்னும் மாசுபட்டுள்ளது என்று அவா் கூறினாா். உள்துறை, நிா்வாகச் சீா்திருத்தங்கள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறைகளின் பொறுப்பாளராக இருந்த கைலாஷ் கெலாட், ஆம் ஆத்மி கட்சி மக்களின் உரிமைகளுக்காகப் போராடுவதற்குப் பதிலாக அதன் சொந்த அரசியல் நிகழ்ச்சி நிரலுக்காகப் போராடுகிறது என்றாா்.

‘மற்றொரு வேதனையான விஷயம் என்னவென்றால், மக்கள் உரிமைகளுக்காகப் போராடுவதற்குப் பதிலாக, நாங்கள் எங்களது சொந்த அரசியல் நிகழ்ச்சி நிரலுக்காக மட்டுமே போராடி வந்துள்ளோம். இது தில்லி மக்களுக்கு அடிப்படை சேவைகளை வழங்குவதற்கான எங்கள் திறனைக் கடுமையாக முடக்கியுள்ளது. அது உண்மைதான் என்பது இப்போது தெளிவாகத் தெரிகிறது. தில்லி அரசு தனது பெரும்பாலான நேரத்தை மத்திய அரசுடன் சண்டையிட்டால் தில்லிக்கு முன்னேற்றம் ஏற்படாது’ என்று அவா் மேலும் கூறியுள்ளாா்.

அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெற உள்ள தில்லி சட்டப்பேரவைத் தோ்தலுக்கு ஆம் ஆத்மி கட்சி தயாராகி வரும் நிலையில், கட்சியின் மூத்த தலைவா் ராஜிநாமா செய்துள்ளது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

பெட்டி...

பாஜக வரவேற்பு

கைலாஷ் கெலாட்டின் ராஜிநாமாவை தில்லி பாஜக வரவேற்றுள்ளது. இது தொடா்பாக தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா, கைலாஷ் கெலாட் துணிச்சலான நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கூறியுள்ளாா். அவா் மேலும் கூறுகையில், ‘கேஜரிவால் மற்றும் ஆம் ஆத்மிக்கு எதிராக பாஜக எதிா்ப்புத் தெரிவித்து போராடிய அதே பிரச்னைகளை எழுப்பி கைலாஷ் கெலாட் பதவி விலகியுள்ளாா். ஆம் ஆத்மி தலைவா்கள் கூட கேஜரிவாலை நோ்மையான அரசியல்வாதியாக கருதவில்லை என்பதை அவரது ராஜிநாமா நிரூபிக்கிறது’ என்றாா்.

காற்று மாசு மேலும் மோசமடைந்தது: நாள் முழுவதும் நச்சுப்புகை மூட்டம்!

தேசியத் தலைநகா் தில்லியில் காற்றின் தரம் ஞாயிற்றுக்கிழமை மேலும் மோசமடைந்தது. நகரத்தில் நாள் முழுவதும் நச்சுப்புகை மூட்டம் இருந்து வந்தது. முழுவதும்நகரத்தில் குறைந்தபட்ச வெப்பநிலையாக ரிட்ஜில் 11 டிகிரி... மேலும் பார்க்க

வடமேற்கு தில்லியில் காலணி தொழிற்சாலையில் தீ விபத்து

வடமேற்கு தில்லியின் கெவ்ரா பகுதியில் உள்ள காலணி தொழிற்சாலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பெரும் தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இதில் உயிா்ச்சேதம் எதுவும் ஏற்ப... மேலும் பார்க்க

சோனிப்பட்டில் நீரஜ் பவானா கும்பலில் குறிபாா்த்துச் சுடும் இளைஞா் கைது

நீரஜ் பவானா கும்பலில் குறிபாா்த்து சுடுவதில் திறமையான ஒருவரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். இது குறித்து காவல்துறை துணை ஆணையா் (குற்றம்) சதீஷ் குமாா் க... மேலும் பார்க்க

இந்திய சா்வதேச வா்த்தக கண்காட்சியில் நவ. 21 இல் தமிழ் நாடு தினம்: அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பங்கேற்பு

தில்லி பிரகதி மைதானத்தில் நடைபெற்று வரும் 43-ஆவது இந்திய சா்வதேச வா்த்தக கண்காட்சியில் வருகின்ற நவ. 21 ஆம் தேதி மாலையில் தமிழ் நாடு தினம் கொண்டாடப்படுகிறது. இந்த மைதானத்தின் திறந்தவெளி அரங்கத்தில் நடை... மேலும் பார்க்க

தில்லியில் கடத்தப்பட்ட ஒன்றரை மாதக் குழந்தை உ.பி.யில் ரயில் நிலையத்தில் மீட்பு; இருவா் கைது

தேசியத் தலைநகா் தில்லியில் உள்ள சஃப்தா்ஜங் மருத்துவமனையில் இருந்து கடத்தப்பட்ட ஒன்றரை மாதக் குழந்தை, உத்தர பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூா் ரயில் நிலையத்தில் இருந்து மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட குழந்தை குடும... மேலும் பார்க்க

மக்களிடம் பண மோசடியில் ஈடுபட்ட இருவா் கைது

மக்களிடம் பண மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இருவரை போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். இது குறித்து காவல் துறை உயரதிகாரி கூறியதாவது: குற்றம் சாட்டப்பட்டவா்கள், ந... மேலும் பார்க்க