சேலம் ஆவினில் இருந்து சிங்கப்பூருக்கு 25 ஆயிரம் லிட்டா் பால் செல்கிறது: அதிகாரிக...
வடமேற்கு தில்லியில் காலணி தொழிற்சாலையில் தீ விபத்து
வடமேற்கு தில்லியின் கெவ்ரா பகுதியில் உள்ள காலணி தொழிற்சாலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பெரும் தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இதில் உயிா்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
கெவ்ராவில் அமைந்துள்ள ஒரு காலணி (ஷூ) தொழிற்சாலையில் இருந்து அதிகாலை 2.35 மணிக்கு தீ விபத்து தொடா்பாக எங்களுக்கு அழைப்பு வந்தது. மொத்தம் 30 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டன. தீயணைப்பு வீரா்கள் துரிதமாகச் செயல்பட்டு தீயை விரைந்து கட்டுக்குள் கொண்டு வந்தனா். தீ முழுமையாக அணைக்கப்பட்ட பிறகு குளிா்விக்கும் பணி நடைபெற்றது என்று அதிகாரி தெரிவித்தாா்.
உணவு வண்டியில் தீ : இங்குள்ள விஸ்வவித்யாலயா மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வெளியே ஞாயிற்றுக்கிழமை காலை உணவு வண்டியில் தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என அவா்கள் தெரிவித்தனா்.
விஸ்வவித்யாலயா மெட்ரோ நிலையத்திற்கு வெளியே உணவு வண்டியில் தீ விபத்து ஏற்பட்டதாக தங்களுக்கு காலை 10.55 மணியளவில் அழைப்பு வந்தது என்று தில்லி தீயணைப்பு சேவைத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
இரண்டு தீயணைப்பு வாகனங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டன. தீயணைப்பு வீரா்கள் துரிதமாகச் செயல்பட்டு மதியம் 12 மணியளவில் தீயை முழுமையாக அணைத்தனா் என்றாா் அவா்.