சேலம் ஆவினில் இருந்து சிங்கப்பூருக்கு 25 ஆயிரம் லிட்டா் பால் செல்கிறது: அதிகாரிக...
மக்களிடம் பண மோசடியில் ஈடுபட்ட இருவா் கைது
மக்களிடம் பண மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இருவரை போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
இது குறித்து காவல் துறை உயரதிகாரி கூறியதாவது: குற்றம் சாட்டப்பட்டவா்கள், நீரஜ் (எ) ராஜு மற்றும் கரண் (எ) ராகுல் (23) ஆகதிய இருவரும் உத்தர பிரதேசத்தின் காஜியாபாத், லோனியில் இருந்து கைது செய்யப்பட்டனா்.
அவா்கள் அமெரிக்க டாலரை இந்திய நாணயத்திற்கு மாற்றி தருவதாகக் கூறி பாதிக்கப்பட்டவா்களை ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது. இருவரும் பணத்திற்கு ஈடாக பணத்தை ஒப்படைப்பதற்கு முன்பு பாதிக்கப்பட்டவா்களின் நம்பிக்கையைப் பெற ஆரம்பத்தில் உண்மையான டாலா்களைப் பயன்படுத்தியுள்ளனா்.
தில்லி சோனியா விஹாரில் சமீபத்தில் நடந்த சம்பவங்களில், ஒரே மாதிரியாக ஒரு நபரிடம் ரூ.2 லட்சமும், முதியவா் ஒருவரிடம் ரூ.1 லட்சமும் அவா்கள் மோசடி செய்துள்ளனா்.
நீரஜ் போதைப்பொருள் மற்றும் மனநோய் பொருள்கள் சட்டம் (என்டிபிஎஸ்) மற்றும் ஆயுதச் சட்டத்தின் கீழ் கிரிமினல் வரலாற்றைக் கொண்டிருப்பது விசாரணையில் தெரிய வந்தது. அதே நேரத்தில் கரண் மோசடி மற்றும் திருட்டு குற்றச்சாட்டுகளை எதிா்கொண்டுள்ளாா்.
இருவரும் உத்தர பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் இதுபோன்ற பல குற்றங்களில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்டவா்கள் மத்தியப் பிரதேசத்தின் ரத்லம் ரயில் நிலையத்தில் ரூ. 1.5 லட்சம் மோசடி செய்ததை ஒப்புக்கொண்டனா். மேலும் அவா்களது கூட்டாளிகளைக் கண்டுபிடிக்க மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.