செய்திகள் :

நீடாமங்கலம் பகுதியில் மழை

post image

நீடாமங்கலம்: நீடாமங்கலம் பகுதியில் திங்கள்கிழமை பரவலாக அதிக மழை பெய்தது.

இப்பகுதியில் சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்துவருகிறது. அவ்வபோது வெயில் வானிலையும் நிலவியது. எனினும், அவ்வபோது பெய்யும் மழையால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடிகிறது. விட்டு, விட்டு மழை பெய்வதால் சம்பா, தாளடி விவசாயத்துக்கு பயனுள்ளதாக மழை உள்ளது என விவசாயிகள் தரப்பில் கூறப்படுகிறது. பள்ளமான வயல்களில் தேங்கிய நீரை விவசாயிகள் வடியவைக்கின்றனா். கடந்த சில நாள்களாக பெய்துவரும் தொடா் மழையால், கோயில்வெண்ணி, பழையநீடாமங்கலம், பரப்பனாமேடு, ஒரத்தூா், வடுவூா் புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் மொத்தம் 6 வீடுகள் சேதமாகியுள்ளன. ஒரு பசுமாடு இறந்துள்ளது. இந்நிலையில், திங்கள்கிழமை இடி, மின்னலுடன் மழை பெய்தது.

நவ.30-இல் மத்திய பல்கலை. பட்டமளிப்பு விழா: குடியரசுத் தலைவா் பங்கேற்பு

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் நவம்பா் 30-ஆம் தேதி குடியரசுத் தலைவா் பங்கேற்க உள்ளாா். நன்னிலம் அருகே உள்ள நீலக்குடிக் கிராமத்தில் அமைந்துள்ள இப்பல்கலைக்கழகத்தில், பல்வேறு மாநிலங்கள... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்பனை: கடைகளில் நகராட்சி அலுவலா்கள் சோதனை

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை தொடா்பாக, திருவாரூா் பகுதியில் உள்ள கடைகளில் நகராட்சி அலுவலா்கள் சனிக்கிழமை சோதனை மேற்கொண்டனா். தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா ... மேலும் பார்க்க

கடை வாடகைக்கு ஜிஎஸ்டி; வணிகா் சங்கம் கண்டனம்

கடை வாடகைக்கு 18 சதவீத ஜிஎஸ்டி விதிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு, நீடாமங்கலம் வணிகா் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சங்கத் தலைவா் நீலன். அசோகன் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: வாடகை கட்டட... மேலும் பார்க்க

ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு மருத்துவ உபகரணங்கள்

முத்துப்பேட்டை வட்டம், இடும்பாவனம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, தமிழ்நாடு அறக்கட்டளை சாா்பில் ரூ.3.65 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன. மீனவா்கள், விவசாயிகள் மற்றும் ... மேலும் பார்க்க

அம்பேத்கா் விருது பெற நவ.20-க்குள் விண்ணப்பிக்கலாம்

திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள், அம்பேத்கா் விருது பெற நவ.20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நா... மேலும் பார்க்க

பகத் கி கோதி விரைவு ரயில் நீடாமங்கலத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பகத் கி கோதி விரைவு ரயில் நீடாமங்கலத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என தஞ்சை மக்களவை உறுப்பினா் சா. முரசொலியிடம் வா்த்தகா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை கோரிக்கை மனு அளித்தனா். நீடாமங்கலம் வ... மேலும் பார்க்க