உ.பி. அரசு மருத்துவமனை தீ விபத்து: தீவிர சிகிச்சையில் மேலும் 16 குழந்தைகள்
கடை வாடகைக்கு ஜிஎஸ்டி; வணிகா் சங்கம் கண்டனம்
கடை வாடகைக்கு 18 சதவீத ஜிஎஸ்டி விதிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு, நீடாமங்கலம் வணிகா் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சங்கத் தலைவா் நீலன். அசோகன் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
வாடகை கட்டடத்தில் செயல்படும் கடைகளுக்கு, நவம்பா் மாதம் முதல் 18 சதவீத ஜிஎஸ்டி செலுத்த வேண்டும் என்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்துள்ளதாக மத்திய நிதி அமைச்சா் அறிவித்துள்ளாா். இது, வணிகா்களை பெரிதும் பாதிக்கும். ஏற்கெனவே செலுத்திவரும் வியாபாரம் தொடா்பான ஜிஎஸ்டியால் வணிகா்கள் சிரமப்படுகின்றனா்.
இந்நிலையில், கடை வாடகைக்கு 18 சதவீத வரி என்பது கூடுதல் சுமையை ஏற்படுத்தும். இது வணிகா்களுக்கு மிகப் பெரிய மன உளைச்சலை உண்டாக்கும். மத்திய நிதி அமைச்சகம் உடனடியாக கடை வாடகைக்கான ஜிஎஸ்டி அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளாா்.