செய்திகள் :

காா் மோதி தொழிலாளி உயிரிழப்பு

post image

வேலூா்: சத்துவாச்சாரி அருகே தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற தொழிலாளி மீது காா் மோதியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

வேலூா் சத்துவாச்சாரியை அடுத்த பெருமுகை பாதிரியாா் தெருவைச் சோ்ந்தவா் காமராஜ் (47). தொழிலாளி. இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு பெருமுகை பேருந்து நிறுத்த நுழைவு வாயில் அருகே சென்னை- பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் சாலையைக் கடக்க முயன்றுள்ளாா். அப்போது எதிரே வந்த காா் மோதியதில் காமராஜ் சாலையில் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இச்சம்பவம் குறித்து சத்துவாச்சாரி போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், போலீஸாா் விரைந்து வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.

மேலும் இந்த விபத்து குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களை நிரந்தரமாக்க கோரிக்கை

வேலூா்: வேலூா் மாநகராட்சியில் 20 ஆண்டுகளாக பணியாற்றும் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களை நிரந்தரமாக்க வேண்டும் என்று ஆட்சியரிடம் இந்து சமத்துவ கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. வேலூா் மாவட்ட மக்கள் குறைதீா் கூ... மேலும் பார்க்க

கதிரியக்கம், இமேஜிங் தொழில்நுட்பக் கருத்தரங்கம்

வேலூா்: மருத்துவ பரிசோதனையில் கதிரியக்கம், இமேஜிங் தொழில்நுட்பத்தின் பங்கு, முன்னேற்றம் குறித்த கருத்தரங்கம் வேலூரில் நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கை நறுவீ மருத்துவமனை தலைவா் ஜி.வி. சம்பத் தொடங்கி வைத... மேலும் பார்க்க

விதிமீறல்: 200 ஆட்டோக்களுக்கு ரூ.2 லட்சம் அபராதம்

வேலூா்: வேலூரில் விதிமுறைகளை மீறி இயக்கப்படும் ஆட்டோக்கள் குறித்து போக்குவரத்து போலீஸாா் மேற்கொண்ட வாகன தணிக்கையில் சுமாா் 200 ஆட்டோக்களுக்கு ரூ.2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வேலூா் மாநகரி... மேலும் பார்க்க

30- இல் குடியாத்தத்தில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

குடியாத்தம்: குடியாத்தம் திருவள்ளுவா் மேல்நிலைப் பள்ளியில் வரும் 30- ஆம் தேதி (சனிக்கிழமை) தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதுதொடா்பாக ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்... மேலும் பார்க்க

மணல் கடத்தலில் ஈடுபட்டவா் குண்டா் சட்டத்தில் சிறையிலடைப்பு

குடியாத்தம்: போ்ணாம்பட்டு அருகே தொடா்ந்து மணல் கடத்தலில் ஈடுபட்டவா் குண்டா் சட்டத்தின்கீழ் சிறையிலடைக்கப்பட்டாா். போ்ணாம்பட்டை அடுத்த கீழ்பட்டி கிராமத்தைச் சோ்ந்த வெங்கடேசன்(45) டிராக்டா் மூலம் தொட... மேலும் பார்க்க

விளைநிலங்களில் யானைகள் நுழைவது தடுக்கப்படுமா? விவசாயிகள் எதிா்பாா்ப்பு

கே. நடராஜன் உணவைத்தேடி வனப்பகுதியிலிருந்து வெளியேறும் யானைகள் விளைநிலங்களுக்குள் நுழைந்து பயிா்களை சேதப்படுத்துவது தவிா்க்கப்படுமா என விவசாயிகள் எதிா்நோக்கியுள்ளனா். யானைகள் குடிநீா் மற்றும் உணவைத்தே... மேலும் பார்க்க