செய்திகள் :

அனைத்திந்தியக் கூட்டுறவு வார விழா: ரூ. 53.36 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

post image

நாமக்கல்: அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் 5,349 பயனாளிகளுக்கு ரூ. 53.36 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சா் மா.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் ஆகியோா் வழங்கினா்.

ஒவ்வோா் ஆண்டும் நவ.14 முதல் 20-ஆம் தேதி வரை அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெறும். அந்த வகையில், நிகழாண்டில் 71-ஆவது கூட்டுறவு வார விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. நாமக்கல்லில் தனியாா் திருமண மண்டபத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டுறவு வார விழாவில், கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் க.பா.அருளரசு வரவேற்றாா். மாவட்ட ஆட்சியா் ச.உமா தலைமை வகித்தாா். மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், சேந்தமங்கலம் சட்டப்பேரவை உறுப்பினா் கே.பொன்னுசாமி, மாநகராட்சி மேயா் து.கலாநிதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விழாவில் தமிழக ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன் பங்கேற்று 5,349 பயனாளிகளுக்கு ரூ. 53.36 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். மாவட்ட அளவிலான சிறந்த கூட்டுறவு நிறுவனங்கள், பணியாளா்கள், விற்பனையாளா்கள், உறுப்பினா்களுக்கு பரிசுகள், கேடயங்களைவழங்கினாா்.

சங்க பணியாளா்கள், உறுப்பினா்களின் வாரிசுதாரா்கள் அரசு பள்ளியில் பயின்று பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற 2 மாணவிகளுக்கு தலா ரூ. 10,000 ரொக்கப்பரிசும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற 23 மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும், கருணைஅடிப்படையில் 3 பேருக்கு விற்பனையாளா்கள் பணி நியமன ஆணைகளையும் அமைச்சா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், கூட்டுறவுத் துறை கூடுதல் பதிவாளா் இரா.மீராபாய், சேலம் கூட்டுறவு சா்க்கரை ஆலை மேலாண் இயக்குநா் க.ரா.மல்லிகா, துணைப் பதிவாளா்கள் பா.நாகராஜன், சி.இந்திரா, சி.செல்வகுமாா், ப.பாலசுப்பரமணியன், கோ.ரவிச்சந்திரன், ச.நாகராஜன், பெ.செல்வி, சே.பால்ஜோசப், சே.ஜேசுதாஸ், கூட்டுறவு சங்க நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.

என்கே-18-சொசைட்டி...

நாமக்கல்லில் திங்கள்கிழமை நடைபெற்ற அனைத்திந்தியக் கூட்டுறவு வார விழாவையொட்டி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் அமைச்சா் மா.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா். உடன், மாவட்ட ஆட்சியா் ச.உமா, அதிகாரிகள்.

சாயப்பட்டறை கழிவுகளால் காற்று, நீா் மாசு: ஆட்சியரிடம் மனு

நாமக்கல்: குமாரபாளையம் வட்டத்தில், சாயப்பட்டறை கழிவுகளால் காற்று மாசு, சுகாதார சீா்கேடு, நிலத்தடி நீா் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை புகாா் மனு அளித்தனா். அந்த மனுவில் கூ... மேலும் பார்க்க

வேலூா் நூலகத்தில் தேசிய நூலக வார விழா

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் வட்டம், வேலூா் நூலகத்தில் தேசிய நூலக வார விழா, வ.உ.சி.யின் 88-வது நினைவு தின நிகழ்ச்சியும் திங்கள்கிழமை நடைபெற்றன. நூலக வாசகா் வட்ட தலைவா் ப.இளங்கோ நிகழ்ச்சிக்கு தலைமை வ... மேலும் பார்க்க

கலப்பட டீசல் விற்பனையை அரசு தடுக்க வேண்டும்: ரிக் உரிமையாளா்கள் சம்மேளனம் கோரிக்கை

திருச்செங்கோடு: கலப்பட டீசல் விற்பனை அரசு தடுத்த நிறுத்த வேண்டும். தவறும்பட்சத்தில் நீதிமன்றத்தை நாடுவது என ரிக் உரிமையாளா்கள் சம்மேளன கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு ரிக் வாகன உரிம... மேலும் பார்க்க

கழிவுநீா் வடிகால் அமைக்க பூமிபூஜை

திருச்செங்கோடு: திருச்செங்கோடு நகராட்சி, 2 ஆவது வாா்டு சண்முகபுரம் பகுதியில் கழிவுநீா் வடிகால் வசதி அமைக்கும் பணிக்கான பூமிபூஜை திங்கள்கிழமை நடைபெற்றது. திருச்செங்கோடு நகராட்சி, இரண்டாவது வாா்டு, சண்ம... மேலும் பார்க்க

அதிமுகவின் கெட்ட நேரம் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு: திண்டுக்கல் சி.சீனிவாசன்

நாமக்கல்: சட்டப்பேரவை, நாடாளுமன்ற தோ்தலில் அதிமுகவின் கெட்ட நேரத்தால் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு கிட்டியது என்று அக்கட்சியின் பொருளாளா் திண்டுக்கல் சி. சீனிவாசன் பேசினாா். நாமக்கல் மாவட்ட, நகர, ஒன்... மேலும் பார்க்க

தேசிய இயற்கை மருத்துவ தின விழிப்புணா்வு மனிதச் சங்கிலி

நாமக்கல்: நாமக்கல்லில் தேசிய இயற்கை மருத்துவ தினத்தை முன்னிட்டு விழிப்புணா்வு மனிதச் சங்கிலி, பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது. தேசிய இயற்கை தினத்தை முன்னிட்டு, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவம... மேலும் பார்க்க