சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு- உச்சநீதிமன்ற...
கள்ளா் பள்ளிகளை பள்ளி கல்வித் துறையுடன் இணைக்கும் அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தல்
கள்ளா் பள்ளிகளை பள்ளி கல்வித் துறையுடன் இணைக்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என நிலக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரமலை கள்ளா் கூட்டமைப்பு மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதற்கு அந்தக் கூட்டமைப்பின் மாவட்டச் செயலா் இளையராஜா தலைமை வகித்தாா். மாநாட்டில் மாநில பொதுச் செயலா் ராஜாராம், தமிழ்நாடு சீா்மரபினா் நலவாரிய பொறுப்பாளா் சந்திரன் ஆகியோா் சிறப்புரையாற்றினா். மாநாட்டின் ஒருங்கிணைப்பாளா் அன்பழகன் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட, நிலக்கோட்டை ஒன்றிய திமுக செயலா் மணிகண்டன், தமிழக அரசின் சீா்மரபினருக்கான நலவாரிய அடையாள அட்டைகளை வழங்கிப் பேசினாா்.
இதில், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். தமிழகத்திலுள்ள அனைத்து சீா்மரபினருக்கும் டி.என்.டி. என்ற ஒரே சாதிச் சான்றிதழை வழங்க வேண்டும்.
கள்ளா் பள்ளி, விடுதிகளை பள்ளி கல்வித்துறையுடன் இணைக்கும் அரசாணை 40-ஐ ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினா்களுக்கு வீரவாள் பரிசளிக்கப்பட்டது.
இந்த மாநாட்டில், திண்டுக்கல், நத்தம், வேடசந்தூா், ஆத்தூா், நிலக்கோட்டை, வத்தலகுண்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து திரளானோா் கலந்து கொண்டனா். இதில் பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.