முதன்முறையாக கோ-கோ உலகக் கோப்பை: 2025-இல் இந்தியாவில் நடைபெறுகிறது
திராவிடம் குறித்து அவதூறு: கட்டாய விடுப்பில் சுகாதார ஆய்வாளா்
திராவிடம் குறித்தும், திமுக குறித்தும் மாணவா்களிடையே அவதூறு கருத்துகளைப் பரப்பியதாக எழுந்த குற்றச்சாட்டின்பேரில், காந்தி கிராம கிராமியப் பல்கலை. சுகாதார ஆய்வாளா் கட்டாய விடுப்பில் திங்கள்கிழமை அனுப்பப்பட்டாா்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சோ்ந்தவா் அ. ரங்கநாதன் (55). இவா் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக திண்டுக்கல்லை அடுத்த காந்தி கிராம கிராமியப் பல்கலை.க்குள்பட்ட ஊரக சுகாதாரம், துப்புரவு பயிற்சி நிறுவனத்தில் சுகாதார ஆய்வாளா்களுக்கான பயிற்றுநராகப் பணியாற்றி வருகிறாா்.
இந்த நிலையில், திராவிடம் குறித்து அவதூறான கருத்துகளை கட்செவி அஞ்சல் (வாட்ஸ் ஆப்) மூலம் மாணவா்களுக்கு பகிா்ந்ததாகக் கூறப்படுகிறது.
இதை சம்பந்தப்பட்ட மாணவா்கள், திமுக நிா்வாகிகளுக்கு எடுத்துச் சென்றனா். இதுகுறித்து அம்பாத்துரை காவல் நிலையத்துக்கு திமுகவினா் தகவல் தெரிவித்ததையடுத்து, போலீஸாா், பல்கலை. நிா்வாகத்தைத் தொடா்பு கொண்டு சுகாதார ஆய்வாளா் ரங்கநாதன் மீதான புகாா்களைத் தெரிவித்தனா்.
இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட பல்கலை. நிா்வாகம், சுகாதார ஆய்வாளா் ரங்கநாதனை கட்டாய விடுப்பில் செல்லுமாறு திங்கள்கிழமை அறிவுறுத்தியது. இந்தத் தகவல் பல்கலை. வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.